உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வருடன் மஹா., கவர்னர் சந்திப்பு

முதல்வருடன் மஹா., கவர்னர் சந்திப்பு

சென்னை: மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, உடல் நலம் விசாரித்தார். சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் உடல்நலக் குறைவால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தற்போது, தன் வழக்கமான பணிகளில், அவர் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை, அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில், மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்த அவர், சமீபத்தில் மறைந்த முதல்வர் ஸ்டாலினின் மூத்த சகோதரர் மு.க.முத்து மறைவிற்கும் இரங்கல் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி