உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணியில் கும்மாங்குத்தா? ராகுல் நிகழ்ச்சிகளை உத்தவ் தாக்கரே புறக்கணித்ததால் பரபரப்பு

கூட்டணியில் கும்மாங்குத்தா? ராகுல் நிகழ்ச்சிகளை உத்தவ் தாக்கரே புறக்கணித்ததால் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கலந்து கொண்ட நிலையில், மற்றொரு கூட்டணி கட்சியான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா புறக்கணித்தது.மஹாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ‛மஹா விகாஸ் அகாடி' என்ற பெயரில் கூட்டணி ஆட்சி அமைத்தன. சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறியதால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இவர் தலைமையில் பா.ஜ., ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோர் இண்டியா கூட்டணியிலும் இடம்பெற்றுள்ளனர். லோக்சபா தேர்தலில், இக்கூட்டணி மஹாராஷ்டிரா மாநிலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் இத்தேர்தலில் சங்கிலி தொகுதியில் உத்தவ் தாக்கரே வேட்பாளர் போட்டியிட்டார். ஆனால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஷால் படேல் தனித்து களமிறங்கி வெற்றி பெற்றார். பிறகு அவர் காங்கிரசில் சேர்ந்தார். இது உத்தவ் தாக்கரே தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.சமீபத்தில், சட்டசபை தேர்தலுக்கு முன்பே மஹா விகாஸ் அகாதி' சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என உத்தவ் தாக்கரே அறிவித்தார். இதனை காங்கிரஸ் மற்றும் சரத்பவார் ஏற்றுக் கொள்ளவில்லை. சரத்பவார் கூறும்போது, தேர்தலுக்கு பிறகே முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். எந்த கட்சி வெற்றி பெறும் தொகுதிகளை பொறுத்தே முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்றார். இதுவும் தாக்கரே தரப்புக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் இதனை சமாளிக்கும் விதமாக, முதல்வர் வேட்பாளர் தொடர்பாக கூட்டணியில் எந்த மோதலும் இல்லை என உத்தவ் மகன் ஆதித்யா தாக்கரே கூறினார்.இந்நிலையில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ஒரு நாள் பயணமாக மஹாராஷ்டிரா வந்துள்ளார். சிலை திறப்பு மற்றும் பொதுக்கூட்டம் என பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் தேசியவாத காங்கிரசின் சரத்பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், உத்தவ் தாக்கரே எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. அவரது கட்சி நிர்வாகிகளும் பங்கேற்கவில்லை. இது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Lion Drsekar
செப் 06, 2024 11:44

இப்போது கும்மாங்குத்து எல்லாம் இருக்கும் தேர்தல் நேரத்தில் எல்லோரும் ஒன்றாகிவிடுவார்கள் மக்களும் எப்போதும் போல் .... வந்தே மாதரம்


பேசும் தமிழன்
செப் 06, 2024 08:38

தேசப்பற்று மிக்க சிவசேனா... இன்று தேச விரோத கும்பல்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு உள்ளது.... அந்த ஊழல் கூட்டணியில் இருந்து வெளியே வருவது தான் அந்த கட்சிக்கு நல்லது.


sankaranarayanan
செப் 05, 2024 21:00

கட்சியில் இனி இவருடைய ஆதரவு உதவாது என்று தெரிந்துதான் உதவாக்கரையை இனி ஒதுக்கிவிட போகிறார்கள்


Narayanan Muthu
செப் 05, 2024 20:10

ஒரு நரி கூட்டம் நாக்கை தொங்கப்போட்டு கொண்டு இப்படி நடந்து விடாத எனும் ஆதங்கத்தில் உள்ளது. அவர்களின் ஆசை நிராசையாகத்தான் போகும். மராட்டியத்தில் பிஜேபி கும்பலின் அழிவு தவிர்க்க முடியாதது.


KRISHNAN R
செப் 05, 2024 20:01

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்


Ramesh Sargam
செப் 05, 2024 19:02

கூட்டணியே ஒரு தெருக்கூத்து கும்பல். அங்கு கும்மாங்குத்துதான் நடக்கும். பரதநாட்டியமா ஆடுவாங்க?


Ramani Venkatraman
செப் 05, 2024 18:48

உத்தவ் தாக்கரே தேசிய ஜனநாயக முன்னணியை விட்டு வெளியேறி, இந்துக்களுக்கு எதிரான போக்கை மேற்கொண்டதற்கு இந்தியா கூட்டணியால் தரப்படும் பாடம்....என் எடுத்துக் கொள்ளட்டும்


Tiruchanur
செப் 05, 2024 17:57

மஹா விகாஸ் அகாடி கூட்டணி உடைந்தால் நாட்டுக்கு நல்லது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை