உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புலிப்பல்லுடன் பிடிபட்டவர் வனத்துறை ஆபீசில் மர்ம சாவு

புலிப்பல்லுடன் பிடிபட்டவர் வனத்துறை ஆபீசில் மர்ம சாவு

திருப்பூர்: புலிப்பல் வைத்திருந்ததாக உடுமலை வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட நபர், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்குட்பகட்ட கருமுட்டி, மேல் குருமலை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து,48.நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கேரள மாநிலம் சின்னாறு வணிக வரித்துறை சோதனை சாவடியில், மாரிமுத்துவை புலி பல் வைத்திருந்ததாக பிடித்து கேரள வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.அவர்கள் உடுமலை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். உடுமலை அழைத்து வந்த நிலையில், வனச்சரக அலுவலகத்தில் மர்மான முறையில் இறந்தார் . வனத்துறையினர் பாத்ரூமில் தூக்கு போட்டதாக தெரிவித்துள்ளனர்.இதனிடையே, மலைவாழ் மக்கள் அடித்து கொன்றதாக புகார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஜூலை 31, 2025 13:20

திருப்புவனம் காவல் நிலைய சாவுக்கு பிறகு, திருப்பூரில் வனத்துறை அலுவலகத்தில் பிடிபட்டவர் சாவு. காவலநிலைய விசாரிப்புத்தான் கொடூரமாக இருக்கும். வனத்துறையினர் விசாரிப்புக்கள் கூடவா? என்னத்தான் நடக்கிறது தமிழகத்தில். சாவுதான், வேறென்ன?


Ramesh Sargam
ஜூலை 31, 2025 13:20

திருப்புவனம் காவல் நிலைய சாவுக்கு பிறகு, திருப்பூரில் வனத்துறை அலுவலகத்தில் பிடிபட்டவர் சாவு. காவலநிலைய விசாரிப்புத்தான் கொடூரமாக இருக்கும். வனத்துறையினர் விசாரிப்புக்கள் கூடவா? என்னத்தான் நடக்கிறது தமிழகத்தில். சாவுதான், வேறென்ன?


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 31, 2025 10:45

அவருக்கு போனபிறவியிலிருந்தே இதய தொர்பான நோய் இருந்திருக்கிறது என்பது தெரியவந்துளது ...


மணி
ஜூலை 31, 2025 10:11

அடிச்சு கொன்னு இருப்பானுக மக்கள் திரளனும்..... எதிரா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை