உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமநாதபுரம் மதுரை எய்ம்ஸ் கல்லூரியை திருமங்கலத்திற்கு மாற்ற நிர்வாகம் முடிவு

ராமநாதபுரம் மதுரை எய்ம்ஸ் கல்லூரியை திருமங்கலத்திற்கு மாற்ற நிர்வாகம் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ராமநாதபுரத்தில் இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் கல்லூரியை மாற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளதுஇது குறித்து கூறப்படுவதாவது: மதுரையில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உடன் இணைந்த மருத்துவக்கல்லூரி ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வருகிறது. இதனை மதுரை திருமங்கலத்திற்கு மாற்ற எய்ம்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் ஹனுமந்த ராவ் கூறி இருப்பதாவது: ராமநாதபுரத்தில் இயங்கி வரும் எய்ம்ஸ் மருத்துவகல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இடவசதி , மருத்துவபயிற்சியில் சிரமம் உள்ளது. இதனையடுத்து மதுரை திருமங்கலத்தில் ஓராண்டிற்கு தற்காலிக வாடகை கட்டடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான டெண்டரை கோரி உள்ளது எய்ம்ஸ் நிர்வாகம்.100 மாணவர்கள் பயிலும் வகுப்பறை, விடுதிகள் வாடகைக்கு எடுப்பது தொடர்பாக டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் வரும் மார்ச் மாதம் துவங்கும் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

manituticorin
ஜன 13, 2024 07:59

எய்ம்ஸ் கட்டுமானப்பணி இந்த மார்ச்சிலாவது தொடங்குமா...


ஆரூர் ரங்
ஜன 11, 2024 21:31

மதுரையில் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் போது எய்ம்ஸ் தேவையற்ற ஆணி. முதல்ல கூவம்???? போல மணக்கும் வைகையை சரி செய்யுங்க.


Dr.Arun
ஜன 12, 2024 12:01

மதுரையில் ஒரே ஒரு மருத்துவக் கல்லூரி மட்டும்தான் இருக்கிறது.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ