உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு பலர் வருவர்

அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு பலர் வருவர்

ஒரு கட்சியில் இருந்து ஒருவர் விலகி இன்னொரு கட்சிக்கு வருவது என்பது, அவர்களாகவே எடுக்கும் முடிவு. அந்த வகையில் தான், மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி, தி.மு.க.,வுக்கு பலரும் வருகின்றனர். யாரையும் ஒரு நாளும், தி.மு.க.,வுக்கு வாருங்கள் எனச் சொல்லி, யாருக்கும் அழுத்தம் கொடுத்ததில்லை; அப்படி செய்ய வேண்டிய அவசியம் தி.மு.க.,வுக்கு இல்லை. தேடி வருவோரை மதித்து வரவேற்று, அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து, கட்சிக்காக பணியாற்ற வேண்டிய பொறுப்பை அளிப்பது தி.மு.க.,வின் கடமை. அ.தி.மு.க.,வில் பலரும் அதிருப்தியாக உள்ளனர். அ.தி.மு.க.,வைக் காட்டிலும் தி.மு.க.,வே சிறந்தது என எங்களைத் தேடி அவர்கள் வருகின்றனர். அந்த வகையில் தான், தி.மு.க.,வில் இணைந்திருக்கிறார், எம்.எல்.ஏ.,வான மனோஜ் பாண்டியன். அவரை தொடர்ந்து நிறைய பேர் தி.மு.க.,வுக்கு வர உள்ளனர். - முத்துசாமி, தமிழக அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S.L.Narasimman
நவ 09, 2025 08:12

சசி கலா, பன்னிரு, செங்கோட்டையன் டிடிவிதினகரன்னு ஒரு பெரிய கூட்டமே தீமுகாவில் சேர்ந்து தலைமை பதிவியையோ இல்லை அண்ணாஅறிவாலய வாசல் காப்பு பதவியோ கைப்பற்ற போறாங்க.


தர்மராஜ்
நவ 09, 2025 06:26

அரசியல் ஒரு வியாபாரம்! லாபம் கிடைக்கும் இடங்களில் வியாபாரம் செய்கின்றனர். எனக்கு பிடித்த பெரிய வியாபாரி திரு செந்தில் பாலாஜி அவர்கள். இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து முதலமைச்சராக வர வாய்ப்பு உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை