உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செங்கோட்டையன் வழியை பலரும் பின்பற்றுவர்

செங்கோட்டையன் வழியை பலரும் பின்பற்றுவர்

கடந்த 2021 தேர்தலின் போது, 'பழனிசாமி ஆட்சியில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது; அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. ஆட்சிக்கு வந்தால், அதில் நடவடிக்கை எடுப்பது மட்டுமல்ல, கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்திலும் நடவடிக்கை எடுப்போம்' என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்தபின், எதையுமே நிறைவேற்றவில்லை. அதேநேரம், 'பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலராக இருப்பது தான், எங்களுக்கு நல்லது' என்கிறார் துணை முதல்வர் உதயநிதி. இதையெல்லாம் பார்க்கும்போது என்ன நினைப்பு வரும்? பழனிசாமிதான், தி.மு.க.,வின் 'பி' டீமாக செயல்படுகிறார் என்பது தானே. இருந்த போதும், அ.தி.மு.க.,வை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அ.ம.மு.க.,வுக்கு இருக்கிறது. இ.தி.மு.க.,வாக இருக்கும் அ.தி.மு.க.,வை, ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வாக மாற்றுவோம். செங்கோட்டையன் வழியை அ.தி.மு.க.,வினர் பலரும் பின்பற்றுவர். - தினகரன் பொதுச்செயலர், அ.ம.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !