உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களை வீணாக்கிய 20 மாணவர்கள்; மருத்துவப்படிப்பில் சேர அதிரடி தடை!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களை வீணாக்கிய 20 மாணவர்கள்; மருத்துவப்படிப்பில் சேர அதிரடி தடை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களை வீணாக்கிய 20 மாணவர்களுக்கு ஓராண்டு மருத்துவப்படிப்பில் சேர தடை விதிக்கப்பட்டு உள்ளது.அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இடங்களை தேர்வு செய்து கல்லூரியில் சேராவிட்டால் நீட் தேர்வை ஓராண்டு எழுத தடை விதித்தும், மருத்துவப்படிப்பில் சேர ஓராண்டு தடை விதித்தும் தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்தது. தேசிய அளவு ஒதுக்கீட்டில் ஒரு மாணவர் எம்.பி.பி.எஸ்., இடத்தை தேர்வு செய்து 3வது சுற்றில் மாநில ஒதுக்கீட்டு இடத்தில் சேர்ந்தால் அவர் தேசிய அளவு ஒதுக்கீட்டில் எடுத்த இடம் காலியாகி விடும். பின்னர் நடைபெறும் மாநில ஒதுக்கீட்டில் அந்த இடம் நிரப்பவில்லை என்றால் காலியாகவே இருக்கும். கடந்தாண்டு 6 எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக இருந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நடப்பாண்டில் 6 எம்.பி.பி.எஸ்., 28 பி.டி.எஸ்., இடங்கள் நிரப்பப்படாமல் வீணாகி உள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு முதல், இரண்டாம் சுற்று கலந்தாய்வு நடந்து, அதன் பின்னர் எஞ்சிய இடங்களை நிரப்ப இறுதிச்சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டது. அனைத்துக்கட்ட கலந்தாய்வின் முடிவில், இடம் பெற்ற சிலர் தேர்ந்தெடுத்த கல்லூரிகளில் சேராமல் படிப்பை கைவிட்டுள்ளனர். அதன் எதிரொலியாக சுயநிதி கல்லூரிகளில் மொத்தம் 6 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 28 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. எம்.பி.பி.எஸ்., ஒதுக்கீடு பெற்ற 4 பேரும். பி.டி.எஸ்., ஒதுக்கீடு பெற்ற 16 பேரும் அந்தந்த படிப்புகளில் சேரவில்லை. அகில இந்திய மருத்துவ ஆணையம் அளித்த கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், இனிமேல் அந்த இடங்களை நிரப்ப முடியாது.ஆகையால், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அபராதம், மருத்துவக் கல்வியில் ஓராண்டு சேர அதிரடியாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. முந்தைய சுற்று கலந்தாய்வில் கல்லூரிகளில் இருந்து விலகுவதற்கான அபராதத்தை மாணவர்கள் செலுத்தியதால் அவர்கள் அடுத்தாண்டு நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ganapathy Subramanian
நவ 19, 2024 13:40

கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரின் கல்லூரிகளில் இப்படி ஒரு ஏய்ப்பு நடந்ததாக நியாபகம். இந்த இடங்களை கல்லூரி நிர்வாகமே வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விற்கலாம் என்று ஒரு வழியை கண்டுபிடித்து அவரின் கல்லூரி ஏற்கனவே மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு பணம் கொடுத்து மறுபடியும் நீட் எழுதவைத்து அந்த இடங்களுக்கு யாரும் சேரவில்லை என்று கணக்கு காண்பித்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விற்று நல்ல லாபம் பார்த்ததாக கேள்விப்பட்டதுண்டு.


Ganapathi Amir
நவ 10, 2024 12:02

சரியான விசாரனை செய்து இந்த மாதிரியான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..பெரும்பாலும் கல்லூரி நிர்வாகமே இம்மாதிரி மாணவர்களுக்கு ஐந்து லட்சம் வரை தந்து சீட்டை காலியாக வைப்பதாக பேச்சுவழக்கில் சொல்லப்படுகிறது..அப்பறம் அவர்களுக்கு தகுந்த விலையில் விற்றுக்கொள்ளலாம்..


spr
நவ 09, 2024 19:51

"எம்.பி.பி.எஸ்., ஒதுக்கீடு பெற்ற 4 பேரும். பி.டி.எஸ்., ஒதுக்கீடு பெற்ற 16 பேரும் அந்தந்த படிப்புகளில் சேரவில்லை" இதன் காரணம் அறியப்பட முழு விசாரணை தேவை ஒருவேளை பணப்பற்றாக்குறையோ


devi shri
நவ 09, 2024 11:57

அன்னை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 50 இடங்களை நிரப்ப வேண்டும்,, ஏற்கெனவே, கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்ற மாணவர்களும் அக்கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி தர வேண்டும்


devi shri
நவ 09, 2024 11:57

அன்னை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 50 இடங்களை நிரப்ப வேண்டும்,, ஏற்கெனவே, கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்ற மாணவர்களும் அக்கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி தர வேண்டும்


jayvee
நவ 09, 2024 07:59

இவங்களுக்கு தடைவிதிங்க.. ஆனா அவர்களுக்கு அடுத்து தகுதியான மாணவர்களை அழைக்கலாமே. முடிந்தவர்கள் சேர்வார்கள் இல்லையா ..


G Mahalingam
நவ 09, 2024 08:53

5 சதவீதம் பாதியில் படிப்பை நிறுத்துகிறார்கள் அல்லது பாஸ் செய்ய முடியாமலும் இன்கம்பிலீட் ஆக வும் இருக்கிறார்கள். அதுவும் வீணாகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை