உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுத்த தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடிக்க மெகா கூட்டணி

அடுத்த தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடிக்க மெகா கூட்டணி

சென்னை : அடுத்த தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடிக்க, மேலும் சில கட்சிகளை இழுத்து, 'மெகா' கூட்டணி அமைக்கும் பழனிசாமியின் திட்டத்தை ஆதரித்து, சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க., செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.வரும் 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிடுவது என, கடந்த மாதம் 11ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 25ல் நடந்த அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்பதை, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி விளக்கமாக எடுத்துரைத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0nvowflz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு, பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலை வகித்தார். வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், முனுசாமி, ஜெயகுமார், சீனிவாசன், உதயகுமார், சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம்:தி.மு.க.,வை பொது எதிரியாக பாவிக்கும் மனநிலையில் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, எதிர்ப்பு ஓட்டுகள் சிதறாமல் இருக்கவும், தீயசக்தி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கும், ராஜதந்திரத்தோடு வலுவான தேர்தல் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.அ.தி.மு.க., தலைமையில், மத்தியில் ஆளும் தேசிய கட்சியான பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இது, வெற்றிக் கூட்டணியாகத் திகழ, இச்செயற்குழு முழுமனதுடன் ஆதரித்து அங்கீகரிக்கிறது. வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு, அ.தி.மு.க., தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் துவக்கமாக, பா.ஜ.,வுடன் பழனிசாமி கூட்டு வைத்துள்ளார். பொது எதிரியான தி.மு.க.,வை வீழ்த்த, ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சிகளை இடம்பெறச் செய்து, 'மெகா' கூட்டணி அமைப்பதற்கு, பழனிசாமி வியூகம் வகுத்து வருகிறார். அவருக்கு செயற்குழு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அ.தி.மு.க., -- பா.ஜ., -- த.மா.கா., கூட்டணியில், பா.ம.க., - தே.மு.தி.க., புதிய தமிழகம் போன்ற கட்சிகள் வந்து விடும் என உறுதியாக நம்பும் பழனிசாமி, நாம் தமிழர் கட்சி அல்லது த.வெ.க.,வை கூட்டணிக்குள் இழுத்துவர தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். சீமானிடம், பா.ஜ., தலைமையும் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. அந்த எதிர்பார்ப்பில் தான், மெகா கூட்டணி அமைப்போம் என, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

'மத்திய அரசுக்கு துணை நிற்போம்'

செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள்: கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளான கல்விக்கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டிக்கிறோம் 'நீட்' தேர்வை ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதி அளித்ததற்காக, மாணவர்களிடமும், தமிழக மக்களிடமும் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் தி.மு.க., அரசு மீது மக்களுக்கு இருக்கும் கடுங்கோபத்தை மறைக்கவே மொழிக்கொள்கை, கல்விக்கொள்கை, கச்சத்தீவு மீட்பு, தொகுதி மறுவரையறை, மாநில சுயாட்சி என, தி.மு.க., அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது கடந்த நான்கு ஆண்டு தி.மு.க., ஆட்சியில் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள், துவங்கப்பட்ட தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமாகப் பேசிய பொன்முடியை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்ட பழனிசாமியை பாராட்டுகிறோம் கொலை, கொள்ளை, போதைப்பொருள், பாலியல் வன்கொடுமை என, தொடர் சமூக விரோத செயல்களால், தமிழகத்திற்கு தி.மு.க., அரசு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது சுய விளம்பர ஆட்சியும், 'போட்டோ ஷூட்' காட்சியும் நடத்தி வரும் தி.மு.க., அரசை கண்டிக்கிறோம் காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். பயங்கரவாத செயல்களை ஒடுக்க, மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அ.தி.மு.க., துணை நிற்கும்.இவை உள்ளிட்ட, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Tamil Inban
மே 03, 2025 23:42

எல்லோரும் சீக்கிரம் கட்சி ஆரம்பித்து விடுங்கள், உங்களுக்கும் அழைப்பு வரும்


thehindu
மே 03, 2025 23:02

பதவிக்காக கொள்ளையடிக்க கொள்ளைக்காரர்களால் உருவான கொட்டாரம்


Mariadoss E
மே 03, 2025 17:46

முதல் முதல் பிஜேபி யை கூட்டணி சேர்த்து வாஜ்பாயை கவுத்தது அம்மையார் தலைமையிலான அதிமுக தான் என்பது தான் உண்மை.


sridhar
மே 03, 2025 19:02

இந்திரா காந்தியை அருவருக்கத்தக்க வகையில் பேசியது கருணாநிதி, ராஜிவ் கொலையானது திமுக ltte க்கு கொடுத்த சுதந்திரம் .


SIVA
மே 03, 2025 14:41

உடனடியாக நாடு முழுவதும் மது விலக்கை அமல் படுத்துங்கள் , இவர்கள் சாராய சாம்ராஜ்யம் அழியும் , கள்ளுக்கு அனுமதி கொடுங்கள் , விவசாயி மற்றும் பெண்கள் ஓட்டு உங்களுக்கேய, சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ளது பலர் குடியை விடுவதால் குடும்பம் , சமூக பொருளாதாரம் முன்னேறும் , டாஸ்மாக் வருமானம் இல்லாமல் அரசு மேலும் இலவச திட்டம் கொடுக்க முடியாது , வரும் பொங்கலுக்கு இவர்களால் மஞ்சப்பை கூட கொடுக்க முடியாது .... ..


Oviya Vijay
மே 03, 2025 14:40

நடப்பு காலத்தில் அரசியலில் யாருமே உத்தமர்கள் இல்லை திமுகவினர் உட்பட... காமராஜர் காலத்தோடு அதெல்லாம் முடிந்து விட்டது. அரசியல் என்ற போர்வையில் இருப்பவர்கள் அனைவருமே அயோக்கியர்களே. பிஜேபியினரையும் சேர்த்து... இன்றைய காலகட்டத்தில் தேர்தல் என்று வந்தால் வேறு வழியின்றி அதிலே ஓரளவுக்கு நல்ல அயோக்கியனையே தேர்ந்தெடுக்க மக்கள் முற்படுகிறோம். அவ்வளவே... அத்திப் பூத்தாற் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் மட்டுமே நேர்மையாக இருக்க முயல்கிறார்கள்... நான் என் முந்தைய பதிவில் கூறியதைப் போல தற்போதைய சூழ்நிலையில் ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியினர் மீது தான் மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சிகளாகவே இல்லை என்பதே உண்மை... இவர்கள் போதாதென்று கவர்னர் சங்கிமங்கிகளின் மொத்த உருவமாக இருக்கிறார்... சொல்லிக்கொள்ளும் படியான எதிர்க்கட்சிகள் என்ற ஒன்றே இங்கே இல்லாத போது வலுவான கூட்டணி கொண்ட ஆளுங்கட்சி ஆட்டோமேட்டிக்காக ஜெயிக்கப் போவதில் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றுமில்லை. வேட்பாளர்களில் யோக்கியர்களை தேட வேண்டுமெனில் கட்சி சார்பற்ற சுயேட்சை வேட்பாளர்களில் ஒருவரைத் தான் நாம் ஆதரிக்க வேண்டும்... ஆனால் அதை நாம் செய்வோமா... பார்க்கலாம்...


vivek
மே 03, 2025 19:05

அறிவுரை சொல்ற அளவுக்கு நீங்க அவ்ளோ வொர்த் இல்லை ஓவியர்..... எல்லாரும் கழுவி ஊத்துறது தெரியலையா...


sridhar
மே 03, 2025 19:06

திமுக சொம்புகள் பல வேஷங்களில் வருவார்கள் , அதில் இதுவும் ஒன்று. அதாவது , எல்லோரும் மோசம் ஆனால் திமுக மற்றவர்களை விட யோக்கியன் . இந்த பீலா எல்லாம் எடுபடாது .


Ramaswamy Sundaram
மே 04, 2025 12:29

கேனத்தனமான ஐடியா கொடுக்க உங்களை போல் நாலுப்பேர் இருந்தாலே pothum


R.PERUMALRAJA
மே 03, 2025 12:31

சமூக நலம் என்னும் போர்வை போர்த்தி கோவன் என்னும் பச்சோந்தியை பணவசதி செய்து கொடுத்து விஜய்யிற்க்கு எதிராக களம் இறக்கி இருக்கிறார்கள் தி மு க வினர் , கள்ள சாராய சாவு நடந்தபொழுது அதை ஆதரித்த இந்த பச்சோந்தி விஜய்யிற்க்கு எதிராக சில நாட்களாக பேசிவருகிறது , கோவனை ஒழித்துக்கட்டுங்கள் விஜய் தானாக வருவார் ஆ தி மு க பக்கம் .


R.PERUMALRAJA
மே 03, 2025 12:25

என்னை " அப்பா அப்பா " என்று அழையுங்கள் என்று கெஞ்சி கொண்டு ஒருவர் இருக்கிறார் , அவர் எதிர்கட்சியாக இருந்த பொழுது , எங்கெல்லாம் போராட்டம் நடக்கிறதோ அங்கு உடனே சென்று " அடுத்து நம்ம ஆட்சி தான் " உங்களுக்கு உறுதுணையாக இருப்பெண் என்று வாய் கூசாமல் பொய் அவிழ்த்துவிட்டார் பழைய ஓய்வூதிய திட்டம் , கோவன் போல பொதுநல தொண்டு என்னும் போர்வையில் உள்ளவருபவர்களுக்கு பண வசதி செய்து கொடுத்து அவர்களை தெரு போராட்டம் நடத்த பணவசதி செய்து கொடுத்தார் . மக்களின் சைக்காலாஜி யை அறிந்து , நீட் என்னும் வார்த்தையுடன் ரகசியம் என்னும் வார்த்தையை சேர்த்து என்று ஏதோ " சிதம்பர ரகசியம் " போல சைக்காலாஜிக்கல்லி ஒரு பிம்பத்தை உருவாக்கி மக்களை குறிவைத்தார் , இப்படியெல்லாம் செய்தும் , ஆ தி மு க வின் உட்கட்சி பிரச்சனையால் சரிந்த வாக்கு சதவிகிதத்தை கொண்டு தான் ஆட்சியை பிடித்தார் . மக்களின் மனம் அறிந்து , நொடிக்கு நொடி போராட்டம் தெருவில் நடைபெறாவிட்டால் , கழுதை தேய்ந்து கட்டரும்பு ஆன பழமொழி தான் பொருந்தும் ஆ தி மு க விற்கு .


திருட்டு திராவிடன்
மே 03, 2025 11:55

அயோக்கியர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து திராவிட அயோக்கிய கட்சியை அழிக்கப் போகிறீர்களா. எப்படி இருந்தாலும் அயோக்கியத்தனம் செய்து வாழ்க வளமுடன்.


Oviya Vijay
மே 03, 2025 10:52

எனக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால்... இங்கே இடம்பெறும் கருத்துக்களும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் போன்ற மற்ற சமூக ஊடக வலைதளங்களில் எல்லாம் பதிவிடப்படும் கருத்துக்களும் முற்றிலும் வேறாக இருக்கிறது... இதற்கான காரணம் என்னவோ? யாரேனும் கவனித்ததுண்டா???


angbu ganesh
மே 03, 2025 09:54

தீயமுக்கவுக்கு அழிவு காலம் வந்திடுச்சு எனவே எடப்பாடி மெனக்கெடவேண்டாம்


முக்கிய வீடியோ