உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமலர் நடத்திய ‛‛மெகா சர்வே : விரைவில் எதிர்பாருங்கள் விறுவிறுப்பான முடிவுகள்

தினமலர் நடத்திய ‛‛மெகா சர்வே : விரைவில் எதிர்பாருங்கள் விறுவிறுப்பான முடிவுகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

எத்தனையோ தேர்தல்களில் எத்தனையோ நிறுவனங்கள் தேர்தல் சர்வேக்களை நடத்தி இருக்கலாம். ஆனால், இம்முறை நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலுக்காக தினமலர் நடத்திய சர்வே பிரமாண்டமானது.சில தொகுதிகளுக்கு மட்டும் சென்று ஓரிருவரை மட்டும் பார்க்காமல், தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள், வேலைக்கு செல்வோர், அரசு அதிகாரிகள், விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், வசதி உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைத்து தரப்பினரையும் பிரதிநிதிப்படுத்துவது போல் சர்வே எடுத்துள்ளோம்.மொத்தம் நாங்கள் பேசிய வாக்காளர்கள் 86 ஆயிரம் பேர். சென்ற ஊர்கள் 3 ஆயிரம் பஞ்சாயத்துகள், தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிகள். இவை அனைத்திற்கும் நாங்கள் பல்வேறு குழுக்களாக சென்று வாக்காளர்களிடம் பேசி விபரங்களை சேகரித்துள்ளோம்.வாக்காளர்களின் விருப்பம் என்ன?தி.மு.க., 39க்கு 39 எடுக்குமா?கூட்டணி இல்லாத அ.தி.மு.க.,விற்கு பலம் இருக்கிறதா?எந்த கட்சிக்கு இரண்டாம் இடம்?அண்ணாமலை கரை சேர்வாரா?மாதம் ரூ.1000 உதவித் தொகை, இலவச பஸ் பயணம் போன்ற திட்டங்கள் திமுக கூட்டணிக்கு ஓட்டுகளை பெற்றுத் தருமா போன்ற ஏராளமான கேள்விகளைக் கேட்டு முடிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் நாங்களே எதிர்பாராத வகையில் பரபரப்பாக அமைந்துள்ளன. இவற்றின் முழு விபரங்கள் விரைவில் உங்கள் தினமலர் நாளிதழில் தேர்தல் களம் பகுதியில் வெளி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

K P SARATHY
ஏப் 13, 2024 00:17

குழப்பம் வேண்டாம் குழப்பக் கூட்டணி வேண்டாம் நரேந்திர மோடியே வருக நிலையான ஆட்சி தருக


Ananth
ஏப் 12, 2024 11:30

பிஜேபி ஐந்து சீட் தமிழ் நாட்டில் இன்னு வரும்


Anantharaman Srinivasan
ஏப் 11, 2024 23:46

பிஜேபி இடங்களில் கருத்துக்கணிப்பிலாவது அட்லீஸ்ட் ஜெயிக்கட்டும்


ANANTHAKRISHNAN R
ஏப் 11, 2024 20:34

தமிழ்நாடு மக்களும், கேரள மாநில மக்களும் அதாவது எல்லா பிரிவினியும் சேர்ந்த ஹிந்து மக்கள் என்னைக்கு ஒருங்கிணைந்து வளமான பாரத நாட்டிற்க்காக மோடியை போல ஓரு ஊழலற்ற தலைவருக்காக வாக்களிப்பார்களோ,அன்று தான் நம் பாரதம் முழு சுதந்திர நாடாக மாறும் புதிதாக உருவாகியுள்ள உழல் கூட்டணியான இன்டி கூட்டணிக்கு வாக்களித்தால், நம் பாரத நாடு மீண்டும் மற்ற நாடுகளிடம் கையேந்தி நாடாக மாறி விடும் இது நிச்சயம் தைரியமாக தரமான உண்மையான செய்திகளை தருவது தினமலர் நாளிதழ் ஒன்று மட்டும் தான் இது திராவிட குடிகார தொன்டர்களுக்கு பிடிக்காது என்று நல்ல மனிதர்களுக்கு நன்றாக தெரிந்த விஷயம் தான்


Rich Narayanan
ஏப் 11, 2024 20:11

தினமலரிடமிருந்து நடுநிலையான கருத்துக் கணிப்பை மட்டுமே விரும்புகிறேன்


P Sundaramurthy
ஏப் 11, 2024 19:14

பி ஜெ பி அறுநூறு இடங்களில் வெற்றி அதானே


Ramamurthy Srinivasan
ஏப் 11, 2024 18:37

நாங்கள் உங்களுடைய சர்வே முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்


sridhar
ஏப் 11, 2024 18:09

Why wait We know what you will say Bjp will win all forty seats Isn't it


அருண், சென்னை
ஏப் 11, 2024 18:02

மாலைவரை 5.45, 10 கமெண்ட்ஸ்ல, 5 கமெண்ட் dmk mindvoice.... ஊருக்கு, உலகுக்கு தெரியுது...எதிர்பார்புமிருக்கு ... மேலும், PM யாருன்னே தெரியல அதுக்கு எதுக்கு புகைச்சல்


நல்லவன்
ஏப் 11, 2024 17:50

தினமலர் ஜெய்க்கும்ன்னு சொன்னவங்க, சொல்லப்போறவங்க எதிர் கட்சியா வந்து சிறைவாசம் போனாங்க, போகப்போறாங்க


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி