உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களுக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை, 2025 மார்ச் மாதம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 4,187 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கிய இப்பணிகளில், 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. இத்திட்டம் வாயிலாக நாள்தோறும், 13.5 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. தமிழக அரசு வழங்கும், 'கோட்டை அமீர்' மத நல்லிணக்க பதக்கம் பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவருக்கு, 25,000 ரூபாய்க்கான காசோலை, பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள், மாவட்ட கலெக்டர் அல்லது https://awards.tn.gov.inஎன்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். வரும் 25ம் தேதி கடைசி நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ