உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

தமிழகம் முழுதும் நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன. பல அணைகளில், மதகுகள், ஷட்டர்கள், நீர் அளவை மானிகள், மின்சாதனங்கள் உள்ளிட்டவை, பராமரிப்பின்மையாலும், வெள்ளநீர் வரத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில், சேலம் - மேட்டூர், கோவை - சோலையாறு உள்ளிட்ட 13 அணைகளில், 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளை நீர்வளத்துறை துவங்கவுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பத்தாம் வகுப்புக்கு, மார்ச், 26ம் தேதி பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. பொதுத் தேர்வுக்கு பதிவு செய்துள்ள மாணவ - மாணவியருக்கான, 'ஹால் டிக்கெட்'டுகளை, 15ம் தேதி பிற்பகல் முதல், www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம் என, பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை