உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மெத் ஆம்பெட்டமைன் கடத்தல்; பின்னணியில் கஞ்சிபாணி இம்ரான்

மெத் ஆம்பெட்டமைன் கடத்தல்; பின்னணியில் கஞ்சிபாணி இம்ரான்

சென்னை: தமிழகத்தில், மெத்ஆம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் பின்னணியில், இலங்கையைச் சேர்ந்த கடத்தல் மன்னன் கஞ்சிபாணி இம்ரான் இருப்பது தெரிய வந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rgl2r5aa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை, அரும்பாக்கம் காவல் நிலைய தனிப்படை போலீசார் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் இணைந்து, மெத் ஆம்பெட்டமைன் கடத்தல் கும்பலைச் சேர்ந்த, 15 பேரை, சமீபத்தில் கைது செய்தனர்.

கடத்தல் பின்னணி

அவர்களிடம் இருந்து, 5 நாட்டுத் துப்பாக்கிகள், 79 துப்பாக்கிக் குண்டுகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், துாத்துக்குடியைச் சேர்ந்த, கூலிப்படை கும்பல் தலைவன் தம்பிராஜா, 60, என்பவர், தமிழகத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ரவுடிகளுக்கு, பீஹார் மாநிலத்தில் தயாரிக்கப்படும் கட்டா என்ற நாட்டுத் துப்பாக்கிகளை விற்றது தெரியவந்தது.கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டு, தம்பிராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தொடர் விசாரணையில், சென்னை உட்பட பல பகுதிகளுக்கு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் பின்னணியில், இலங்கையைச் சேர்ந்த, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபாணி இம்ரான் இருப்பது தெரியவந்துள்ளது.

போதைப்பொருள்

தனிப்படை போலீசார் கூறியதாவது:

கஞ்சிபாணி இம்ரான், நிழல் உலக தாதா போல செயல்பட்டு வருபவர். ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, இலங்கைக்கு மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருளை கடத்தி வந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்துவதில் கில்லாடி.துபாயில் நட்சத்திர ஹோட்டலில், கூட்டாளி மாகந்துரே மதுாஷ் உடன் தங்கி இருந்தபோது, 2019, மார்ச் 28ல், இலங்கை போலீசார் பிடித்து வந்து, தங்கள் நாட்டில் உள்ள சிறையில் அடைத்தனர். ஆறு ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பின், சமீபத்தில் கஞ்சிபாணி இம்ரான் வெளியே வந்துள்ளார். சென்னையில் கைதான நபர்களுக்கு, துப்பாக்கி கொடுத்தால் போதைப்பொருள் தருவது என்ற ஒப்பந்த அடிப்படையில், மெத் ஆம்பெட்டமைன் வினியோகித்து வந்தது தெரியவந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

user name
ஜன 09, 2025 10:15

இதில் ஹிந்துக்கள் யாரும் சம்பந்த படவில்லையா


Mathan
ஜன 09, 2025 10:13

இது ஹராம் இல்லையா ?


mei
ஜன 09, 2025 10:09

இலங்கை முஸ்லீம்கள் கடத்தல் மூலம் பெரும் பணக்காரர்களாக உள்ளனர்


Shekar
ஜன 09, 2025 09:57

தயவுசெய்து இப்பேர்ப்பட்ட மிருகங்களை அவர் இவர் என மரியாதையை தந்து எழுதாதீர்கள்


Senthoora
ஜன 09, 2025 08:56

பணத்துக்காக சோரம் போகும் மனிதர்கள் இருக்கும் வரை, இந்தியா அல்ல எந்த நாட்டையும் திருத்த முடியாது.


PARTHASARATHI J S
ஜன 09, 2025 08:46

எல்லாவித அதர்மக்காரியங்களையும் மனச்சாட்சி இல்லாமல் செய்வது அனைத்தும் முஸ்லீம்களே. பணத்தை சாப்பிட முடியாது. அது கழுதைக்குக் கூட பிடிக்காது. இராவணன், துரியோதனன் ஆகியோரை விட இந்த ஆள் மிகமிக மோசமான ஜன்மம். என்னத்தை சொல்ல ?


subramanian
ஜன 09, 2025 23:21

ஜே.ஸ். பார்த்தசாரதி, ராவணன், துரியோதனன் இவர்களெல்லாம் உண்மையான வீரர்கள், நல்லவர்கள் என்பது ராமாயணம் மகாபாரதம் படித்தால் புரியும். இன்றைய மோசமான ஆட்களை அவர்களுடன் ஒப்பிடாதீர்கள்.


N.Purushothaman
ஜன 09, 2025 07:40

இம்ரானுக்கு கஞ்சி குடிக்க முடியாத அளவுக்கு வாயை ஒடைச்சி ஜெயில்ல போடணும் ....


Kasimani Baskaran
ஜன 09, 2025 07:37

அயலக அணியின் ஒரு அங்கம். அதை பெயிண்ட் அடித்து இலங்கை குடிமகன் நேரடியாக இந்தியாவில் போதைப்பொருள் கடத்துவதாக சொல்வது பூ சுற்றும் வேலை.


Vijay
ஜன 09, 2025 06:42

எதில் தான் இவர்கள் இல்லை


அப்பாவி
ஜன 09, 2025 06:18

மூர்க்க நெறிப்படி வாழுறான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை