உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மினி பஸ் கட்டணம் உயர்வு;புதிய கட்டண விவரம் இதோ!

மினி பஸ் கட்டணம் உயர்வு;புதிய கட்டண விவரம் இதோ!

சென்னை: தமிழகத்தில் மினி பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட புதிய கட்டணம், மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ஏற்கனவே இருக்கும் பர்மிட்தாரர்களுக்கும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தில் பர்மிட் பெறுவோருக்கும் பொருந்தும்.முதல் இரண்டு கிலோமீட்டர்களுக்கு 4 ரூபாய் என மினி பஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை (4 கிலோமீட்டர் வரை) அதே நான்கு ரூபாய் தான்.மூன்றாம் நிலை (6 கிலோமீட்டர் வரை) 5 ரூபாய்.நான்காம் நிலை (8 கிலோமீட்டர் வரை) 6 ரூபாய்ஐந்தாம் நிலை (10 கிலோமீட்டர் வரை) 7 ரூபாய்ஆறாம் நிலை (12 கிலோமீட்டர் வரை) 8 ரூபாய்ஏழாம் நிலை (14 கிலோமீட்டர் வரை) 9 ரூபாய்எட்டாம் நிலை (16 கிலோமீட்டர் வரை) 9 ரூபாய்ஒன்பதாம் நிலை (18 கிலோமீட்டர் வரை) 9 ரூபாய்பத்தாம் நிலை (20 கிலோமீட்டர் வரை) 10 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜன 28, 2025 21:20

இதில் கூட பெண்களுக்கு இலவசமா?


Arul Narayanan
ஜன 28, 2025 16:40

ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக குறைந்த பட்ச கட்டணமே ₹10 வசூலிக்க படுகிறது. மதுரை மாட்டு தாவனியிலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ள சர்வேயர் காலனிக்கு ₹10ம், 2கிமீ தொலைவில் உள்ள புதூருக்கு ₹12ம் வசூலிக்க படுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை