உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது மேனாமினுக்கி கட்சி அல்ல இளைஞர்களுக்கு துரைமுருகன் பாடம்

இது மேனாமினுக்கி கட்சி அல்ல இளைஞர்களுக்கு துரைமுருகன் பாடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''கொள்கை உறுதியோடு தி.மு.க.,வுக்கு வாருங்கள்,'' என, இளைஞர்களுக்கு தி.மு.க., பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

தி.மு.க., வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், துரைமுருகன் கூறியுள்ளதாவது:

இன்று நிறைய இளைஞர்கள், படித்தவர்கள், தி.மு.க., பக்கம் திரும்பி உள்ளனர். அவர்களை எல்லாம் மனமார வரவேற்கிறேன். இளையோர் வந்தால்தான், இக்கட்சியை அடுத்து நடத்த வாய்ப்பு ஏற்படும். கட்சியில் நிலைத்திருக்க வேண்டுமானால், மன உறுதி வேண்டும்.நாம் ஏற்றுக்கொள்கிற கொள்கை உண்மையானதாக இருக்கும்போது, இந்த கொள்கைக்காக உழைக்கலாம்; தியாகம் செய்யலாம் என்ற எண்ணம் உங்களுக்கு வரும். எனவே, கொள்கை அடிப்படையில், கட்சிக்கு வர வேண்டும்.தி.மு.க., கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, மன திடத்தோடு, கொள்கையோடு வாருங்கள். கட்சிக்கு நீண்ட வரலாறு உண்டு. அந்த வரலாற்றை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். தியாகம் புரிய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.'கட்சியால் தனக்கு என்ன லாபம் எனக் கருதுபவர் ஒரு வகை. தன்னால் கட்சிக்கு என்ன லாபம் என்பது இன்னொரு வகை. தன்னால் கட்சிக்கு என்ன லாபம் என பார்ப்பவர், கட்சியின் ரத்த நாளத்தை போன்றவர். கட்சியால் தனக்கு லாபம் எனக் கருதுபவர், கட்சியில் வளரும் புற்றுநோய்க்கு சமமானவர்' என, கருணாநிதி கூறுவார்.எனவே, கட்சிக்கு வரும் நண்பர்களை மனமார வரவேற்கிறேன். எங்களுக்குப் பின், இந்த கட்சியை நீங்கள்தான் கட்டிக்காக்க வேண்டும். எனவே, கொள்கை உறுதியோடு வாருங்கள். மனதிடத்தோடு வாருங்கள். தியாகம், எந்த நிலைக்கும் தயார் என நினைத்து வாருங்கள். வரலாறுகளை படித்துவிட்டு வாருங்கள்.இது மேனாமினுக்கி கட்சி அல்ல. அடித்தளத்தில் உள்ள, ஏழை மக்கள், பாட்டாளி தோழர்கள், நெசவாளர்கள் போன்றோருக்காக உழைக்கிற கட்சி. அதையும் மனதில் நிறுத்துங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

jaya
செப் 20, 2024 10:41

அண்ணன் கொள்கை என்று அடிக்கடி கூறியிருக்கிறார் , அதை தெளிவாக கூறியிருக்கலாம். தி மு க வின் கொள்கை " கருணாநிதி குடும்பத்துக்கு அடிமையாயிருப்பது, முடிந்தவரையில் கொள்ளையடிப்பது "


S Srinivasan
செப் 19, 2024 15:38

all youngsters go to dmk to put jalra to a family, if you go against them you cannot survive, only you have to speak democracy but no internal democracy's , you have to speak against Hindus but you should go to temple, you shoild be good drama artist no other thing is required most of the time you have to put jalra


venugopal s
செப் 19, 2024 15:15

எதற்கு புரியாத வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்த வேண்டும்? சுருக்கமாக பாஜக இல்லை என்று சொல்லி விட்டு போகலாமே!


Barakat Ali
செப் 19, 2024 16:00

அவர் குறிப்பிடுவது இளவரசரை ..... இளவரசரை அரசராக விடமாட்டோம் என்கிறார் ..... குரல் நடுக்கம், நடை தளர்வு, வியர்த்தல், குதித்துப் பேசுதல் போன்ற ஆபத்தான அறிகுறிகளை உடைய மன்னருக்கு ஏதாவது ஆகிவிட்டால் இளவரசரை மன்னராக ஏற்கமாட்டோம் என்கிறார் துரைமுருகன் ...


theruvasagan
செப் 19, 2024 14:50

இங்கிலீஷ் சினிமாவில் லாரல் ஹார்டி என்று இரண்டு பேர் நல்லா காமெடி பண்ணுவாங்க. லாரல் ஒல்லி குச்சியா இருப்பார். ஹார்டிக்கு ரெட்டைநாடி சரீரம். அவங்க பண்ற காமெடி எல்லாம் சில்லி காமெடியாவே இருக்கும். அறிவு பூர்வமாக இருக்காது. ஏனென்றால் இரண்டு பேருக்கும் கேணத்தனமான ரோல்தான் கொடுப்பாங்க.


manokaransubbia coimbatore
செப் 19, 2024 13:14

ஆனால் எம்பீ மகன் எம்பீ எம்மேலேயே மகன் எம்மேலேயே போஸ்டர் ஒட்டுகிறவன் மகன் போஸ்டர் ஒட்டுகிறவன் இதுதாண்டா உங்க சமூக நீதி


எஸ் எஸ்
செப் 19, 2024 12:56

87 வயதில் பவுடர், டை, மேக்கப் பார்க்கவே அருவருப்பா இருக்கு


ஆரூர் ரங்
செப் 19, 2024 12:30

கழகத்தின் சுயரூபம் 21 ம் பக்கத்தில் விலாவாரியாகக் கூறப்பட்டுள்ளது. இதை அறிந்ததுதான் பலர் சேர்க்கின்றனரா?


Venkateswaran Rajaram
செப் 19, 2024 11:47

இவர்கள் நடத்தும் ஆட்சி அலிபாபாவும் 40 திருடர்களும் போல் உள்ளது


G.Kirubakaran
செப் 19, 2024 11:33

கட்சி தலைவர்கள் மட்டுமே லாபம் பார்க்கலாம். தொண்டர்கள் கடைசி வரை அடிமைகள் தான் .நீண்ட காலம் கட்சியில் இருக்கும், துரை முருகன் நாட்டு மக்களுக்காக என்ன செய்தர்? ஒரு ஏறி, ஒரு குளம், ஒரு ஆறு உருப்படியாக தூர் வாரினாரா??


sundaran manogaran
செப் 19, 2024 11:15

தி.மு.க.மேனாமினுக்கி கட்சி என்பதை சூசகமாக சொல்லி இருக்கிறார் சீனியர்.கருணாநிதி குடும்ப கம்பெனிக்கு சேவகம் செய்ய பகுத்தறிவு உள்ள இளைஞர்கள் யாரும் வரமாட்டார்கள். உங்களைப் போன்ற கொட்டை போட்டவர்களே கம்பெனியைக் காத்து அழித்து விட்டு போய்விடுங்கள்.தமிழ்நாடு பிழைத்து போகட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை