உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 7,900 அங்கன்வாடி பணியாளர்கள் ஒரு மாதத்தில் நியமிக்க திட்டம்: அமைச்சர் கீதா ஜீவன்

7,900 அங்கன்வாடி பணியாளர்கள் ஒரு மாதத்தில் நியமிக்க திட்டம்: அமைச்சர் கீதா ஜீவன்

சென்னை : 'குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடிகளில், 7,900 பணியாளர்களும், சத்துணவு சமையலர், 8,900 பேரும், ஒரு மாதத்திற்குள் நியமனம் செய்யப்பட உள்ளனர்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

வி.சி., - பனையூர் பாபு: செய்யூர் தொகுதியில், 333 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இதில், 120 மையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன. அவற்றுக்கு சொந்த கட்டடங்களை கட்டி தர வேண்டும். அங்கன்வாடி மையங்களில், 46 உதவியாளர், 51 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு பணியாளர் இரண்டு, மூன்று மையங்களை கவனிக்க வேண்டியுள்ளது. வளம்மிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ், கடந்தாண்டு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 50 பின்தங்கிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, ஒரு நாளைக்கு ஐந்து மி.லி., நெய் மற்றும் நிலக்கடலை வழங்கப்பட்டது. இது, பிப்ரவரி மாதம் வரை மட்டுமே கிடைத்தது. இந்த திட்டம் தொடருமா?அமைச்சர் கீதா ஜீவன்: அங்கன்வாடிகளுக்கு சொந்த கட்டடம் கட்ட, அரசு பரிசீலிக்கும்.எந்த அங்கன்வாடிக்கு முதலில் கட்ட வேண்டும் என முன்னுரிமை பட்டியலை, எம்.எல்.ஏ., கொடுத்தால் அதன் அடிப்படையில் ஆவன செய்யப்படும். காலி பணியிடங்களை நிரப்ப, கடந்த வாரம் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நெய், நிலக்கடலை வழங்கும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் தொடர்வது குறித்து, அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்.பா.ம.க., - ஜி.கே.மணி: தமிழகம் முழுதும் அங்கன்வாடி மையங்களில், ஊழியர்கள் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இங்கு நீண்ட காலமாக பணியாற்றுபவர்கள் நிரந்தரம், ஊதிய உயர்வு கேட்டு வருகின்றனர். சத்துணவு மையங்களில் காலி பணியிடங்கள் அதிகரித்து உள்ளன. இவை நிரப்பப்படுமா?அமைச்சர் கீதா ஜீவன்: குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடிகளில், 7,900 பணியாளர்களும், சத்துணவு சமையலர் 8,900 பேரும் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஒரு மாதத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

edwinyesudass edwinyesudass
மார் 25, 2025 19:25

அனைவருக்கும் வாழ்வாதாரம் கிடைக்கும்.நன்று...


Ambika vadivel
மார் 25, 2025 11:58

Nan rompa sirammathil kastapatukren thayavu seithu intha velai enakku thru maru kettukolkiren


Lingam Sankaran
மார் 25, 2025 09:15

இதுதான் திமுகவின் கடைசி ஐந்தாண்டு ஆட்சி இனி மேல் தலை கீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் ஆட்சிக்கு வர முடியாது, எனவே சுருட்ட முடிந்த அளவு சுருட்டு .


Kasimani Baskaran
மார் 25, 2025 03:57

தீம்க்கா காட்டில் கடும் மழை ...


Nandakumar Naidu.
மார் 25, 2025 00:58

2026 க்குள் உழல் செய்யவேண்டும் என்று அழிகிய முட்டை திட்டமிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.


சமீபத்திய செய்தி