உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / களத்திற்கே வரவில்லை...! தி.மு.க.வின் 200 பற்றி விமர்சிப்பதா? நடிகர் விஜயை சாடிய அமைச்சர்

களத்திற்கே வரவில்லை...! தி.மு.க.வின் 200 பற்றி விமர்சிப்பதா? நடிகர் விஜயை சாடிய அமைச்சர்

சென்னை: இன்னும் களத்திற்கே வராதவர்கள் எல்லாம் தி.மு.க.,வின் 200 என்ற இலக்கை விமர்சிக்கிறார்கள் என்று நடிகர் விஜயை அமைச்சர் சேகர்பாபு மறைமுகமாக விமர்சித்துள்ளார். சென்னையில் அவர் அளித்த பேட்டி வருமாறு; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e8ij22cu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வருகின்ற சட்டசபை தேர்தலில் 200 என்ற நம்பிக்கை வீணாகும் என்று சிலர், அதிமேதாவிகளாக. தற்குறிகளாக, அரசியல் களத்திற்கே வராதவர்கள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். எங்களின் நிலைப்பாடு 200 அல்ல, 234யும் தி.மு.க., கைப்பற்றும். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக, எப்பொழுது எல்லாம் தி.மு.க., மீது இப்படி அவதூறுகள் ஏற்படும் போது, பரப்பும் போது 80 கிமீ பயணித்துக் கொண்டிருக்கும் திமுக தொண்டர் 100 கிமீ வேகத்தில் பயணிப்பார்கள். மீண்டும் 2026ல் ஸ்டாலினை முதல்வராக அரியணை ஏற்றும் வரை எங்களது வேகம் குறையாது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சுந்தரம் விஸ்வநாதன்
டிச 07, 2024 16:33

மழை பெய்தபொழுது இந்த அமைச்சர் எந்த களத்துல இருந்தாரு?


Ramesh Sargam
டிச 07, 2024 13:04

மக்களே கூர்ந்து கவனியுங்கள். ஆளும் கட்சியில் உள்ளவர்களும், ஆட்சியை பிடிக்க போகிறவர்களும், தினம் தினம் ஒருவரை குறைகூறிக்கொண்டு தாக்கிக்கொள்கிறார்களே தவிர, புயல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, அங்குள்ள மக்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான எந்தவித உதவியும் செய்வதில்லை. வெறும் போட்டோ சூட் மட்டும்தான். அடுத்தமுறையாவது, நேர்மையான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுங்கள்.


Ramaswamy Jayaraman
டிச 20, 2024 14:26

நேர்மையான அரசியல்வாதி, யார் இருக்கிறார்கள். நேர்மையா இருப்பவர் அரசியலுக்கு வரமாட்டார்.


sankar
டிச 07, 2024 12:04

உங்களுடைய இரண்டாம் அணியை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் - அது உங்கள் உரிமை


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 07, 2024 11:48

அப்படி திருப்பி ப்போடு திருப்பாச்சேத்தி அருவாளை. களத்துக்கு வராம, மழை புயல் ஓய்வதற்கு முன்னாலேயே நம்ம பாரதி பாதிப்பே இல்லைன்னு சொன்னதை இந்த அமைச்சர் பாக்கும்போது கண்ணை மூடிக்கிட்டு இருந்தாரா, இல்லே யாராச்சும் இவர் கண்ணைப் பொத்தி கண்ணாமூச்சி வெளையாட்டு விளையாடுனாங்களா?


vijay
டிச 07, 2024 11:47

வரும் தேர்தலில் சீட்டு வேணும் என்று ஜால்ரா போடுறாரு பெரியவர்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 07, 2024 11:39

நாங்களே தமிழக வெற்றிக் கழகத்தை இறக்கிவிட்டு நாங்களே கேள்வியும் கேட்போம் ..... ஏன்னா அவ்ளோ நேர்மை எங்ககிட்டே ......


JANA VEL
டிச 07, 2024 11:14

ஓவர் ஸ்பீடு உடம்பு தேறாது மினிஸ்டர்


JANA VEL
டிச 07, 2024 11:13

இந்த 200 .... 200 அப்புடின்னு சொல்றீங்களே ... அது உங்கள் உ பி அடிமைகளுக்கு தினம் குடுக்குற கூலிதானே. இல்லே சும்மா கேட்டேன். ஆமா நீங்க கூலி கொடுக்குறது பத்தி விஜய் பேசுனா உங்களுக்கு கோபம் வர்றது நியாயம் தானே


V RAMASWAMY
டிச 07, 2024 11:08

ஜாலரா போடவேண்டும் என்பதற்காக என்னவெல்லாம் உளறுகிறார்? தி மு க என்ன விமரிசனத்திற்கு அப்பாற்பட்டதா? வீடு தோறும், சந்து போந்து தோறும் எவரும் கண்டவண்ணம் தி மு கவை விமரசிக்கும் பொழுது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர் விமரிசிப்பதில் எந்த தவறும் கிடையாது. மாறாக, அவரை சாடும், அமைச்சரையும் சேர்த்து விமரிசிக்க உள்ளாக்குகிறார்.


சம்பா
டிச 07, 2024 10:25

இனி எடுபாடாது


சமீபத்திய செய்தி