உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 13 அமாவாசைகளும், 100 பவுர்ணமிகளும்: இ.பி.எஸ்., உடன் செந்தில் பாலாஜி மோதல்!

13 அமாவாசைகளும், 100 பவுர்ணமிகளும்: இ.பி.எஸ்., உடன் செந்தில் பாலாஜி மோதல்!

சென்னை: தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசைகள் தான் இருக்கிறது என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, 'இன்னும் 100 பவுர்ணமிகளுக்கு ஸ்டாலின் தான் முதல்வர் என்பதை இ.பி.எஸ்., 2026ல் உணர்ந்து கொள்வார்' என்று தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை சோழிங்கநல்லூரில் நேற்று முன்தினம் (ஜன.,17) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., '2026-ம் ஆண்டு கண்டிப்பாக அ.தி.மு.க., ஆட்சியை கொண்டு வருவோம். தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான் பாக்கி. இந்த ஆட்சியில் 4 ஆண்டு காலம் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார். தன்னுடைய மகனை துணை முதல்வர் ஆக்கியது தான் அவர் செய்த சாதனை', என்று கூறினார். தி.மு.க.,வின் ஆட்சியையும், அமாவாசையையும் தொடர்புபடுத்தி இ.பி.எஸ்., தொடர்ந்து பேசி வருவதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ''இப்படி ஒவ்வொரு அமாவாசைக்கும் பழனிசாமி கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். அமாவாசைகள்தான் கடந்து சென்று கொண்டிருக்கிறன. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் பழனிசாமி, இன்னும் நூறு பவுர்ணமிகளுக்கு ஸ்டாலின்தான் முதலமைச்சராக தொடர்வார் என்பதை 2026ல் உணர்ந்து கொள்வார்,'' என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஜன 19, 2025 22:07

திரு வைகுண்டேஸ்வரன் அவர்களே, எல்லா கட்சிகளும் அழியவேண்டும் என்றுதான் கூறுகிறேன். மக்கள் அல்ல. 2004 சுனாமியின்போது நான் பாலவாக்கம் கடற்கரை அருகில்தான் இருந்தேன். பாதிக்கப்பட்ட ஒரு சிலரை என் காரில் ஏற்றி பாதுகாப்பான இடத்தில் விட்டேன். அது உங்களுக்கு தெரியாது.


Ramesh Sargam
ஜன 19, 2025 20:01

ஒரே ஒரு சுனாமி, 2004 போல, எல்லா கட்சிகளும் அழிந்துவிடும்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 19, 2025 21:23

எவ்வளவு வன்மம், எதிர்மறை எண்ணம்?? Ramesh s, நீங்கள் எப்போதும் இப்படி நெகடிவா தான் பேசிண்டு இருப்பீங்களா?? எதிர்க்க திராணி இல்லாத கையாலாகாதவன் தான் சாபம் விடுவான். அதுவும் பலிக்காத சாபம் விடுவான். எப்படி, உங்க ஊரில் கடல் இல்லை போல, அதான் கடலோர மாவட்ட மக்கள் சாகட்டும் னு சாபம் உடுறீங்க. உங்களை மாதிரி ஆட்களைத் திருத்தவே முடியாது. வெறுப்பு அரசியல் செய்து BP வந்துடப் போறது.


முக்கிய வீடியோ