உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் கட்டண உயர்வு கிடையாது அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்

மின் கட்டண உயர்வு கிடையாது அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வீட்டு மின் இணைப்புகளுக்கு, எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும்' என, மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, அரசு வெளியிட்ட அறிக்கை:மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், வீட்டு மின் இணைப்புகளுக்கு, எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என, மே, 20ம் தேதி விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும், மின் கட்டணம் குறித்து, மறுபடியும் வதந்திகள் பரவி வருவதால், இதுகுறித்து மீண்டும், அரசின் சார்பில் தெளிவுப்படுத்தப்படுகிறது. தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்படவில்லை.முதல்வரின் வழிகாட்டுதலின்படி, ஒழுங்கு முறை ஆணையம், மின் கட்டணம் தொடர்பாக ஏதேனும் ஆணை வழங்கினாலும், அதை நடைமுறைப்படுத்தும் போது, வீட்டு மின் நுகர்வோருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், எந்த ஒரு மின் கட்டண உயர்வும் இருக்காது.தற்போது வழங்கப்படும், 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும், தொடர்ந்து வழங்கப்படும் என, அமைச்சர் சிவசங்கர் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எனவே, மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

vbs manian
ஜூன் 30, 2025 08:05

தேர்தல் நெருங்கி வருவதால் எந்த கட்டண உயர்வும் இருக்காது. தேர்தல் முடிந்த பின் இருக்கு கச்சேரி.


Venukopal, S
ஜூன் 30, 2025 05:53

தேர்தல் சுரம், பயம், athu சரி, நிதி வருவாய்க்கு விடியா மாடல் என்ன செய்ததது? இப்போது ஒவ்ஒருத்தர் தலையிலும் 10 லட்சம் கோடி கடன். இத்துடன் சேர்த்து 11 லட்சம் கோடி...நாட்டை பல தசாப்தங்கள் பின்நோக்கி படுகுழியில் தள்ளும் மாடல்...


சுந்தர்
ஜூன் 30, 2025 05:06

டிஜிட்டல் மீட்டர் வைச்சு மாத மாதம் பில் தருவது என்ன ஆச்சு?


ஓவியா விஜய், karjat
ஜூன் 30, 2025 11:45

அது அடுத்த முறை ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து.. நாளை நமதே 234 லும் நமதே 2045 வரை நாம்தான் ஹீ ஹீ


jss
ஜூன் 30, 2025 18:55

கனவு காணும் உரிமை நிச்சயம் உங்களுக்கு உண்டு.


Kasimani Baskaran
ஜூன் 30, 2025 03:50

தேர்தல் வருவதால் அறிவிப்பு உடனே வெளியாகாது.


முக்கிய வீடியோ