உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலாவதி இருமல் மருந்து விவகாரத்தில் துரிதமாக செயல்பட்டதால் பாதிப்பு இல்லை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

காலாவதி இருமல் மருந்து விவகாரத்தில் துரிதமாக செயல்பட்டதால் பாதிப்பு இல்லை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

சைதாப்பேட்டை: ''ம. பி., மாநிலத்தில் காலாவதி இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழந்ததாக வந்த தகவலை அடுத்து, தமிழக சுகாதாரத்துறை துரிதமாக செயல்பட்டதால், இங்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,'' என, மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னையில் நேற்று அவர் கூறியதாவது: ம த்திய பிரதேச மாநில மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு, அக்., 1ம் தேதி அவசர கடிதம் வந்தது. அதில், ம.பி., மாநிலத்தில் குழந்தைகள் மரணத்திற்கு காரணமாக கருதப்படும் காலாவதியான மருந்து, பெங்களூரு மற்றும் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்டதாக குறிப்பிடப் பட்டிருந்தது. அன்றைய தினமே, முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், மருந்துகள் விதி 1945 கீழ் விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, சர்ச்சைக் குரிய, 'கோல் ட்ரிப்' இருமல் மருந்து உள்ளிட்ட ஐந்து மருந்துகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. அ தன் முடிவில், 'டைஎத்திலீன் கிளைகோன்' என்ற உயிர்கொல்லி நச்சு வேதிப்பொருள், 48.6 சதவீதம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, துணை மருத்துவ கட்டுப்பாடு இயக்குநர் உத்தரவின்படி, தமிழகம் முழுதும் இந்த மருந்து தடை செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில் லை. தமிழகத்தில் இருந்து ஒடிசா மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு இந்த மருந்து வினி யோகம் செய்யப்படுகிறது என்பதால், அம்மாநிலங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 'ஸரேசன்' மருந்து நிறுவனத்திற்கு, மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்த, கடந்த 3ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ம.பி.,யிடம் இருந்து தகவல் பெற்ற, 48 மணி நேரத்தில், தமி ழக மருந்து கட்டுப்பா டு துறை துரிதமான நடவடிக்கை மேற்கொண்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAJ
அக் 06, 2025 07:41

என்ன சார் ..... சொல்றிங்க..


rama adhavan
அக் 06, 2025 07:31

அதைத்தான் செய்யவேண்டும். அதற்குதான் அரசு நிர்வாகம் உள்ளது. இதற்கு ஏன் தற்பெருமை.


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
அக் 06, 2025 06:16

அமைச்சர் பொய் சொல்கிறார். அது காலாவதி ஆன மருந்து அல்ல. மருந்தில் உயிர்கொல்லி நச்சு வேதிப்பொருள் இருந்ததே காரணம் என்று அவரே சொல்கிறார். உற்பத்தியானது காஞ்சிபுரத்தில். அந்த நிறுவனத்தை காப்பாற்ற காலாவதி ஆன மருந்து என்று சொல்லி மக்களை ஏமாற்ற அமைச்சர் பொய் சொல்வதாக சந்தேகம் ஏற்படுகிறது.


Mani . V
அக் 06, 2025 05:25

எப்படி திமிங்கிலம் லஞ்சம் வாங்கிய நிறுவனத்திடம் காலாவதியான மருந்துகளை உடனேயே வேறு இடத்திற்கு மாற்றி வையுங்கள் என்று சொல்லியா? மோடுமுட்டி அது காலாவதி ஆகவில்லை விஷம் கலந்து உள்ளதாம். உன்னையெல்லாம் சுகாதாரத்துறை மந்திரி ஆக்கிய அந்த இளமை புகுத்தி விடும் அப்பாவைச் சொல்லணும்.


முக்கிய வீடியோ