உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர்கள் ராஜினாமா; அவமானம் தவிர்க்க தமிழக அரசுக்கு இருக்கும் ஒரே வழி!

அமைச்சர்கள் ராஜினாமா; அவமானம் தவிர்க்க தமிழக அரசுக்கு இருக்கும் ஒரே வழி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஒரே நாளில், மூன்று வெவ்வேறு அமைச்சர்கள் மீது, மூன்று வெவ்வேறு நீதிமன்றங்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தது, தமிழக அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் நடந்திராத ஒன்று.முதல் வழக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மீதானது. வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டு குறித்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.'அமைச்சராக இருப்பதால் சாட்சிகள் அஞ்சுகிறார்கள்' என்பது புகார்.அவருக்கு கொடுத்த ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'நன்னடத்தை காரணமாக ஜாமின் தரவில்லை. அமைச்சர் பதவி ஏற்க நாங்கள் ஜாமின் தரவில்லை.செந்தில் பாலாஜிக்கு தேவை ஜாமினா, அமைச்சர் பதவியா என்று முடிவு செய்து சொல்லுங்கள்' என்று கூறி காலக்கெடு விதித்துள்ளனர். இதனால் அவரது பதவி பறிபோகும் என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ஆனாலும் கூட, அவரை ராஜினாமா செய்யும்படி முதல்வர் கூறவில்லை. பொன்முடிஇன்னொரு அமைச்சரான பொன்முடி, சைவம், வைணவத்தை விலைமாதுவின் செயலோடு ஒப்பிட்டுப்பேசி, மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியவர். அவரது கட்சிப்பதவியை மட்டும் பறித்த தி.மு.க., அமைச்சர் பதவியில் நீடிக்க அனுமதி கொடுத்திருக்கிறது. கட்சிப்பதவிக்கே தகுதி இல்லாதவர் என்றால், அமைச்சர் பதவிக்கு எப்படி பொன்முடி தகுதி பெறுகிறார் என்பதை தி.மு.க.,வும், முதல்வரும் தான் விளக்க வேண்டும். பொன்முடி மீது ஏன் தானாக முன்வந்து போலீஸ் வழக்கு பதியவில்லை, வேறு யாராவது என்றால் போலீசார் விட்டு விடுவார்களா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். போலீசார் வழக்கு எதுவும் பதியாத நிலையில், தாமாக முன் வந்து வழக்கு எடுத்து விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.அப்படி இருந்தும் அவரது ராஜினாமாவை முதல்வர் கோரவில்லை. கேட்பதற்கே காது கூசும் வார்த்தைகளை, பெண்களும் இருந்த மேடையில் மைக்கில் பேசிய பொன்முடி, இன்னும் அமைச்சராகவே நீடிக்கிறார். துரைமுருகன்மூன்றாவது அமைச்சர் துரைமுருகன். கட்சியில், எல்லோருக்கும் மிக மூத்த தலைவர். சில நாட்களுக்கு முன்னதாகத்தான், மாற்றுத்திறனாளிகளை, இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தைகளை மேடைப்பேச்சில் பயன்படுத்திவிட்டு, மன்னிப்பு கேட்டார் துரைமுருகன்.அவர் மீதான ஊழல் வழக்குகளில் அடுத்தடுத்த நாட்களில் இரண்டு தீர்ப்புகள் வந்து விட்டன. சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகனை விடுவித்தது செல்லாது என்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என்றும், 6 மாதங்களுக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.சரியாக தேர்தல் நேரத்தில் இந்த வழக்குகளில் தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை இந்த வழக்குகளில் துரைமுருகனுக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில், அது சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு பெரும் பாதகமாக முடியும்.இதையெல்லாம் முதல்வருக்கு எடுத்துச் சொல்ல சரியான ஆலோசகர்கள் யாரும் இல்லை. அதனால் துரைமுருகனும் இன்னும் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார். தேவை நல்ல ஆலோசகர்கள்அடுத்தடுத்து நீதிமன்றங்களில் குட்டு மேல் குட்டு வாங்கினாலும், துடைத்துக் கொண்டே மவுனமாக இருக்கிறது தி.மு.க., அரசு. சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த கவர்னருக்கு எதிரான வழக்கில் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதை தலையில் துாக்கி வைத்துக் கொண்டாடினர் தமிழக முதல்வரும், அவரது ஆதரவு அடிப்பொடிகளும். ஆனால், அதற்கடுத்த சில நாட்களில் மூன்று அமைச்சர்கள் மீது மூன்று வெவ்வேறு நீதிமன்றங்கள் சரமாரியாக குட்டு வைத்து உத்தரவை பிறப்பித்துள்ளன.ஆனாலும் கூட, அவர்கள் மீது முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, சமூக வலைதளத்தில் அரசு மீதும், முதல்வரின் செயல்பாடு பற்றியும் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஊழல் புகாருக்கு ஆளான அமைச்சர்களையும், வாய்க்கொழுப்பில் பேசிய அமைச்சரையும் ராஜினாமா செய்ய வைப்பதால் அரசுக்கு அவப்பெயர் எதுவும் ஏற்படப் போவதில்லை; மத்திய அரசுக்கு பணிந்து விட்டதாகவும் அர்த்தம் ஆகாது.தவறு கண்டவுடன் முதல்வர் நடவடிக்கை எடுத்து விட்டார் என்ற வகையில் முதல்வருக்கு நற்பெயரே கிடைக்கும்.இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. சம்பந்தப்பட்ட மூவரையும் ராஜினாமா செய்ய வைப்பதன் மூலம், அவப்பெயர் ஏற்படுவதை அரசு தவிர்க்க முடியும்; தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த வழக்குகளில் எதிர்மறை தீர்ப்பு வரும்பட்சத்தில் முதல்வருக்கும், அரசுக்கும், கடும் நெருக்கடி ஏற்படும். 'அதைத் தவிர்க்க, குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்களை உடனடியாக ராஜினாமா செய்ய உத்தரவிடுவதே முதல்வருக்கு சிறந்த வழியாக இருக்கும்' என்கின்றனர், அரசியல் ஆய்வாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

angbu ganesh
மே 02, 2025 15:02

பொம்மைக்கு இன்னும் மேலிடத்து உத்தரவு வரவில்லை அது வரைக்கும் அது சாவி கொடுக்காத பொம்மை தூங்கும் பொம்மை please out from india with your family


Ramaswamy Sundaram
ஏப் 26, 2025 16:05

ஆகா என் மகன் சிங்கத்துக்கு பிறந்த புலிக்குட்டி...அவன் ஒருனாலும் அவதூறுகளுக்கு டிபணியமாட்டான் தம்பி உடையான் படைக்கு anjaan


kesavan.C.P.
ஏப் 26, 2025 08:57

இந்தியா. தேர்த்தல் கோளில் போட்டி இட கல்வி தகுதி நிர்ணயம் செய்ய வேண்டும் . பதவி வகிக்க வும் கல்வி தகுதி நிர்ணயம் செய்ய வேண்டும் . அரசியல் சாசனம் சட்டங்கள் திருத்தி நடைமுறை படுத்த வேண்டும் வழக்கு அப்பீலுக்கு ஏற்கப்பட்ட உடன் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பதவி தகுதி நீக்கம் செய்யப் பட வேண்டும் ட்


சுந்தர்
ஏப் 26, 2025 06:44

குற்றவாளிகள் அமைச்சர்களாக தொடர்கிறார்கள். இதற்கு முதல்வரே பொறுப்பு. காலம் பதில் சொல்லும்.


Ganapathi Amir
ஏப் 26, 2025 06:30

அரசியலில் இருப்பதற்கும் == எம்.எல்.ஏ... அமைச்சர் ... முதலமைச்சர் ... போன்ற பதவிகளில் அமர்வதற்கும் கடுமையான தகுதிகளை நிர்ணயிக்க வேண்டும் ... 25 வயதிருந்தால் போதும் ... யார் வேண்டுமானாலும் வரலாம் என்பது இங்கு அரசியலை அருவெறுக்கத்தக்க ஒன்றாக மாற்றிவிட்டது..


Marimuthu Veeranan
ஏப் 26, 2025 00:31

இவர்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் தான் சிந்திக்க வேண்டும்......


முருகன்
ஏப் 25, 2025 22:08

மக்கள் மிகவும் தெளிவாக யோசிப்பார்கள் இவர்களுடன் கூட்டணி வைத்தால் எல்லாம் மாறி விடும் இல்லை என்றால் அந்த கட்சி முடக்கப்படும்


நிக்கோல்தாம்சன்
ஏப் 25, 2025 20:59

அவமானம் , எங்கள் குடும்ப ஊடகங்களில் இருட்டடிப்பு செய்து இணைய சேவையையும் நாங்க ஸ்டார்ட் செய்து பிசினெஸ் செய்வோம் ,இதுநாள் வரை டாஸ்மாக் மாத்திரம் கொடுத்த்தோம் , இனி மனநிலை பிறழ்வையும் கொடுப்போம் அப்போ என்ன பண்ணுவீங்க ,


V Ramanathan
ஏப் 25, 2025 19:30

நாங்கள் திமுக. எங்களுக்கு மானத்தைவிட பணம்தான் முக்கியம். அதற்காக வெட்கம் மானம் எல்லாம் பார்க்கமுடியுமா?


Sundaran
ஏப் 25, 2025 19:00

அந்த தைரியம் இவருக்கு இல்லை. துண்டு சீட்டை பார்த்து தப்பும் தவறுமாக படிக்க மட்டுமே தெரியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை