வாசகர்கள் கருத்துகள் ( 2 )
போன்கள் விற்றிருக்காது. ஒரு சிலர் இப்படி அவர்களே தீ வைத்துக்கொள்வார்கள் நஷ்ட ஈடு பெற. இங்கு எப்படியோ...
டைட்டானிக் கப்பல் பற்றி இது போல ஒரு கதை உண்டு இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக என்று
மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவிலில் மொபைல் ஷாப் தீப்பற்றி எரிந்து ரூ 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெரு சேர்ந்த குறளரசன்.31. இவர் வைத்தீஸ்வரன் கோவில் ரயில்வே ரோட்டில் அரசன் மொபைல்ஸ் சேல்ஸ் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இன்று காலை கடை திறப்பதற்காக வந்த குறளரசன் கடையில் பொருட்கள் தீப்பற்றி எரிந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன்பு கடையில் உள்ள மொபைல் உதறி பாகங்கள் அனைத்தும் தீ பற்றி எரிந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. இது குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிந்து, செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
போன்கள் விற்றிருக்காது. ஒரு சிலர் இப்படி அவர்களே தீ வைத்துக்கொள்வார்கள் நஷ்ட ஈடு பெற. இங்கு எப்படியோ...
டைட்டானிக் கப்பல் பற்றி இது போல ஒரு கதை உண்டு இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக என்று