உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று மிதமான மழை வானிலை மையம் தகவல்

இன்று மிதமான மழை வானிலை மையம் தகவல்

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம், நாலுமுக்கு பகுதியில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், 6; திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில், தலா, 5 செ.மீ., மழை பெய்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய 'மோந்தா' தீவிர புயல், ஆந்திராவில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே, காக்கிநாடாவுக்கு தெற்கில் நரசப்பூர் அருகில், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு கரையை கடந்தது. நேற்று காலை நிலவரப்படி, இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து, ஆந்திர பகுதிகளில் நிலவுகிறது. மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவிய காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் அதே பகுதியில் நீடிக்கிறது. தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில், நவ., 4 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை