உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோடி இலங்கை செல்வதால் நடுக்கடலில் கெடுபிடி குறைவு

மோடி இலங்கை செல்வதால் நடுக்கடலில் கெடுபிடி குறைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வலையில் அதிக மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து 460 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வழக்கம் போல இந்திய -- இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர்.ஆனால், வழக்கமாக வரும் இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்து இல்லாததால், மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடித்து நேற்று காலை ராமேஸ்வரம் திரும்பினர்.பெரும்பாலான மீனவர்கள் எதிர்பார்த்த சீலா மீன், பாரை மீன், குமுலா மீன்கள் அதிகமாக சிக்கின. ஏப்., 5ல் இலங்கைக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதால், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் கெடுபிடி காட்டவில்லை. இதனால் அதிக மீன்வரத்து சிக்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kumar Balakrishnan
ஏப் 05, 2025 16:37

நன்றாக உள்ளது .இது போல் அப்பொழுதும் இருக்கணும்.


Neelachandran
ஏப் 01, 2025 10:17

பிரதமர் செல்வதால் கெடுபிடி மிதம் எனல் ராஜீய பாசாங்கு.பிழைப்பிற்காக செல்லும் மீனவர்மீதல்லவா பரிவு வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை