உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது உங்கள் இடம்: பணம் வாங்குபவர்கள் சிந்திக்க வேண்டும்!

இது உங்கள் இடம்: பணம் வாங்குபவர்கள் சிந்திக்க வேண்டும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கி.முத்துகிருஷ்ணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'

அயோத்தி ராமர் கோவில் திறப்பை, பா.ஜ.,வின் திருவிழாவாக மாற்ற நினைப்பதா' என்று, தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார். மேலும், 'இறை நம்பிக்கை ஒவ்வொரு மனிதரின் விருப்பமும், உரிமையும் ஆகும். ஒருவரது பக்தியை அரசியலுக்கான முதலீடாக மாற்றுவது ஜனநாயகத்துக்கு எதிரானது மட்டுமல்ல... ஆன்மிக அறங்களுக்கே எதிரானதும் ஆகும்.'கோவில் கட்டுவதையும், திறப்பதையும் தன் கட்சியின் சாதனையாக காட்டி, மக்களை ஏமாற்ற பா.ஜ., அரசும், பிரதமர் மோடியும் நினைப்பது ஏற்கத்தக்கதல்ல' என்றும் கூறியுள்ளார். இவர் ஏன் இப்படி கொதிக்கிறார், குமுறுகிறார்?இறை நம்பிக்கை, ஒவ்வொரு மனிதரின் விருப்பமும், உரிமையும் ஆகும் என்று 'யாருக்குமே தெரியாத' ஒரு உண்மையை தெரிவித்துள்ளார்.சரி...மத்திய அரசு வெள்ள நிவாரண உதவித் தொகைக்காக அனுப்பும் பணத்தை, நேரடியாக பயன்பாட்டாளர் வங்கிக் கணக்கில் செலுத்தாமல், அந்த பணத்தை ஒரு கவரில் போட்டு, அந்த கவரின் மேல் ஸ்டாலின் படத்தையும் போட்டு, ஏன் வினியோகிக்க வேண்டும்?'மக்களுக்கு நன்மை செய்வதன் வாயிலாக அல்லாமல், மக்களை ஏமாற்றுவதன் வாயிலாக வெல்ல முடியுமா என்று பா.ஜ., கட்சி பார்க்கிறது' என்று சொல்லும் பாலு, மேற்படி வெள்ள நிவாரண உதவித்தொகை விஷயத்தில் எதை நினைத்து இப்படி செய்கின்றனர்?'மத்திய அரசிடமிருந்து வெள்ள நிவாரண தொகை வரும்; அதை முதல்வர் படம் போட்ட கவரில் கொடுக்க வேண்டும்' என்று, வருமுன் யோசித்து, கவரை முன்னதாகவே அச்சிட்டு வைக்கும் தமிழக அரசு, இதேபோல் சென்னை வெள்ளத்தில் மூழ்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று ஒரு முறையாவது வருமுன் யோசித்துள்ளதா?ஒரு பேச்சுக்கு ஹிந்துக்கள் அல்லாத மற்ற மதத்தினர், 'தி.மு.க.,விற்கு எங்கள் ஓட்டு கிடையாது' என்று, சொல்வதாக வைத்துக் கொள்வோம். ஒரு தி.மு.க.,காரராவது ரம்ஜானுக்கு கஞ்சியோ, கிறிஸ்துமசுக்கு கேக்கோ சாப்பிடுவாரா?பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுபவர்கள், இது குறித்து சிந்திக்க வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

ராமகிருஷ்ணன்
ஜன 18, 2024 21:39

இந்த கொள்ளை கூட்ட ஆட்சிக்கு இந்தியாவின் மொத்த GST வரியை கொடுத்தாலும் பணம் போதவில்லையே என்று சொல்வாங்க. அதனால நிதி அமைச்சர் கொடுத்த பணத்திற்கு கணக்கு சரியா காட்டினா மட்டும் அடுத்த தவணை தரனும். நேர்மையான ஆடிட்டர்களை வைத்து செக் பண்ணுங்க. ஆடிட்டர்களை விலைக்கு வாங்கிடுவாங்க.


Veeraputhiran Balasubramoniam
ஜன 18, 2024 16:41

"ஒரு பேச்சுக்கு ஹிந்துக்கள் அல்லாத மற்ற மதத்தினர், 'தி.மு.க.,விற்கு எங்கள் ஓட்டு கிடையாது' என்று, சொல்வதாக வைத்துக் கொள்வோம். திராவிடரை குறைத்து மதிப்பிடாதீர்கள்... ஒசியில் கிடைப்பதை ஈகொ பார்த்து விடுவதா நடக்காது ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்..


Karthikeyan K Y
ஜன 18, 2024 15:02

நீதிமன்றம் மக்களுக்காக சுய மோட்டோ முறையில் எவ்வ்வளவு சொத்து அது எப்படி வந்தது அவருடைய மகனுக்கு குடும்பத்திற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள சில நாடுகளில் எப்படி சொத்து வந்தது என்பதை செய்தால் அதில் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்தை மக்களுக்கு அதனை மீட்டு எடுத்து அர்பணிக்கலாம். கப்பல்,கல் பட்டியல் பெட்ரோலியம் நிறுவனம் ஆயில் நிறுவனம் சேது சமுத்திரம் திட்டத்தில் அடித்தது -


Dhanraj Anagannan
ஜன 18, 2024 14:22

தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள கோதண்டபாணி ராமர் கோவில் அல்லது ஸ்ரீ ராமர் கோவில் ஒரு பழமையான கோவில், இது ராமாயண காலத்திலேயே உள்ளது என்று பலர் கூறுகின்றனர். ராமரின் ராஜ்ஜியம் மற்றும் அயோத்தியின் பிறந்த இடமாக பெயரிடப்பட்ட அயோத்தியாபட்டினா என்ற ஊரில் அமைந்துள்ள இந்த ஆலயம், ஒரே கல்லால் செய்யப்பட்ட கோவிலுக்குச் செல்ல இதுவே சிறந்த நேரமாக இருக்கும். இந்த கல்லில் முதன்மை தெய்வங்களின் உருவங்கள் மற்றும் ராமாயணத்தின் பிற உருவங்கள், மேலே சிங்கம் மற்றும் கீழே யானையுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக, கோவிலில் தூண்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது, அவற்றைத் தட்டினால் அவை மெல்லிசையை உருவாக்குகின்றனபுகழ்பெற்ற ராமேஸ்வரம் தீவில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயில், அதே பெயரில் உள்ள முக்கிய நகரத்திலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ளது, மேலும் இது தீவின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. ராமர் இலங்கைக்கு பாலம் கட்டிய இடம் வரலாற்று சிறப்புமிக்க ராமேஸ்வரம் என்று கூறப்படுகிறது. மேலும் இராவணனுடனான போரின் போது ராமர் செய்த பாவங்களைப் போக்க பிரார்த்தனை செய்த இடமாகும். கடலால் சூழப்பட்ட கோதண்டராமர் கோயில் இந்துக் கடவுளை, அவரது மனைவி சீதை மற்றும் லட்சுமணன், அனுமன் மற்றும் விபீஷணன் ஆகியோருடன் வழிபடுகிறது. தனுஷ்கோடியை 1964 இல் சூறாவளி தாக்கியதில் இருந்து தப்பிய ஒரே வரலாற்று கட்டிடம் இதுவாகும். இந்த கோவிலில் ராமாயணத்தின் காட்சிகளை சித்தரிக்கும் சில நம்பமுடியாத ஓவியங்கள் மற்றும் அவரது வில்லுடன் ராமர் சிலை உள்ளது. முடிகொண்டான் கோதண்டராமர் கோவில் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறப்படும் ராமர் கோயில் உள்ளது. முடிகொண்டான் கோதண்டராமர் கோயில், திருவாரூரில் இருந்து 15 கிமீ தொலைவிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க மயிலாடுதுறையில் இருந்து 20 கிமீ தொலைவிலும் முடிகொண்டான் என்ற பெயரில் அமைந்துள்ளது. ஏழு பெரிய சப்த முனிவர்களில் ஒருவரும் ரிக்வேதத்தின் ஆசிரியருமான பரத்வாஜ முனிவரை சமாதானப்படுத்துவதற்காக இது கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ராமர் அரசராகவும், அவரது தலையில் கிரீடத்துடன் அவரது அரசாட்சியை சித்தரிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள அரிய கோவில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கோலவில்லி ராமன் கோவில், திருவெள்ளியங்குடி கடவுள்கள் மனிதகுலத்தை ஆண்ட காலத்தைச் சேர்ந்த மற்றொரு கோயில், தென்னிந்தியாவின் ஆழ்வார் கவிஞர்-துறவிகளால் குறிப்பிடப்பட்ட விஷ்ணு அல்லது அவரது வடிவங்களை வணங்கும் 108 கோயில்களில் திருவெள்ளியங்குடியில் உள்ள கோலவில்லி ராமன் கோயிலும் ஒன்றாகும். எனவே, கும்பகோணத்தில் இருந்து சுமார் 17 கிமீ தொலைவில் உள்ள சமய முக்கியத்துவம் வாய்ந்த தலமாகும். புராணக்கதைகள் ஒருபுறம் இருக்க, பல்லவ வம்சத்தால் சுமார் 1,400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறப்படும் இது மிகவும் பழமையான கோயிலாகும். இது சோழர், விஜயநகரம் மற்றும் மராட்டியப் பேரரசுகளால் மேலும் உருவாக்கப்பட்டது. கருடனின் நான்கு கை சிலைகளுக்காக இந்த கோவில் தனித்துவமானது, விஷ்ணுவின் மலை, இந்தியாவின் பெரும்பாலான கோவில்களில் ஒரு அரிய காட்சி. ஸ்ரீ யோக ராமர் கோவில், நெடுங்குணம் நெடுங்குணம் ஸ்ரீ யோக ராமர் கோயில் திருவண்ணாமலை நகரத்திலிருந்து 55 கிமீ தொலைவில் உள்ளது, அதன் நுழைவாயில் பிரதான சாலையிலிருந்து சற்று தொலைவில் உள்ளது. ராமர் வில் அல்லது ஆயுதங்கள் இல்லாமல், அமைதியான நிலையில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கும் இந்தியாவின் ஒரே கோயில் இதுவாகும். இதற்கிடையில், சீதை தாமரையுடன், ராமரின் பாதங்களை நோக்கி சைகை காட்டுகிறாள். லக்ஷ்மணன் தனது ஆயுதங்களுடன் ராமருக்குப் பின்னால் பணிவுடன் நிற்கிறார், அதே சமயம் அனுமன் ராமர் முன் கோஷமிடுவதைக் காட்டுகிறார். இங்குள்ள அனுமனின் தோரணமும் அரிதானது, கையில் ஒரு கையெழுத்துப் பிரதி உள்ளது. விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் ராமர் மிகவும் அமைதியான நிலையில், அவரது வலது கையை மார்பில் வைத்து, கண்களை மூடியவாறு காட்சியளிக்கிறது. பிரகாசமாக வர்ணம் பூசப்ப ........இது மாதிரி இனியும் நம் தமிழ் நாட்டில் பண்டைய வரலாறு சித்தரிக்க பட்ட இடங்கள் இருக்கையில் புதியதாக உருவாக்கப்பட்டதை பார்க்க காலம் கடந்து செல்லலாமே புதியதாக உருவாக்கப்பட்டது. நமக்கு தற்போது தேவை இல்லை. பழையவை தான் பொன் என்பார்கள். ராமர் என்பது விஷ்ணுவின் அவதாரம். மண்ணில் அவதரித்து நல்லவைகளை சொல்லி சென்று உள்ளார். அது கதையாக இருக்கலாம் அல்லது உண்மை யாக இருக்கலாம். ஆனாலும் நீதியானது இதை வைத்து ஏமாற்றல் ஆகாது தனராஜ்ங்கண்ணன்


A1Suresh
ஜன 18, 2024 13:07

திமுக குடும்பம் எப்படி வேண்டுமானாலும் சுரண்டி கொழுத்து உலகிலேயே பெரிய பணக்காரர்கள் ஆகவேண்டும். அதற்காக காஷ்மீரில் எப்படி ஷேக் அப்துல்லா ப்ரீமியர்-பிரதமர் என்ற பதவியில் இருந்தாரோ அப்படி திமுக குடும்பம் மாறவேண்டும். காஷ்மீருக்கு முன்னூற்று எழுபது சலுகை தந்தது போல தமிழகத்திற்கும் வேண்டும். தமிழகத்திற்கு ஒரு தனி அரசியலமைப்பு சட்டம் வேண்டும். ராணுவம்-தொலைதொடர்பு-ரயில்வே தவிர அனைத்துமே தமிழக்திற்கு தந்து விடவேண்டும். அனைத்து உலக வங்கிகளிலும் பல லட்சம் கோடிகளுக்கு கடன் வாங்கி, அவற்றை ஹவாலா முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி விடுவர். முடிவில் தமிழகம் அன்றைய காஷ்மீர் போல ஓட்டாண்டி ஆகும்.


saravan
ஜன 18, 2024 12:09

வந்துட்டாருல்ல நம்ப ஐயங்கார்...எனது சார்பாக இருநூறு தரப்படும்


Velan Iyengaar
ஜன 18, 2024 12:39

எப்போவும் போல வாயிலேயே வடை வந்து சேராது என்று தெரியும்... வாயிலேயே வடை சுட சங்கிகளுக்கு சொல்லியா தரணும்???


Narayanan
ஜன 18, 2024 13:34

வாயால வடைசுடும் ஆளும்கட்சி திமுக என்பது இந்த வேலன் என்பவருக்கு தெரியாதா? அல்லது பணம் பாடுபடுத்துகிறதா? இவர் இன்னும் ஹிந்துமதத்தையும் அவர்களின் கலாச்சாரத்தையும் சீண்டும் கட்சியை ஆதரிப்பது வேடிக்கையாக இருக்கிறது


R Kay
ஜன 18, 2024 15:46

ஹவாலா


GoK
ஜன 18, 2024 10:06

துண்டு ஏந்தி காசு பொறுக்கின கும்பலெல்லாம் இன்னிக்கி கோடீஸ்வரனாயிட்டானுங்க இந்த திராவிட முட்டாள்கள் கும்பல்ல ....கடைசில முட்டாளானது மக்கள்தான்


T.sthivinayagam
ஜன 18, 2024 09:20

பணமும் பொடுக்காமல் மக்கள் சேர்த்து வைத்த பணத்தை உண்டியலிளும் அர்ச்சகர்க்கும் கொடுக்க செல்லி ஓட்டையும் வாங்குபவர் மிக்பெரிய ஏமாற்றுக்காறர்கள்


sridhar
ஜன 18, 2024 09:54

வேணும்னா சேகர் பாபு பாக்கெட்டில் போட சொல்லவா .


Suppan
ஜன 18, 2024 12:00

சுத்திவிநாயகம் ஐயா அர்ச்சகர்களும் எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று தெரியுமா? வக்ப் வாரியத்திலிருந்து ஒரு சல்லி கூடப்பெறுவதில்லை. ஆனால் முல்லாக்களுக்குக் அள்ளிக் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு கொடுக்கப்படும் தொகையில் ஒரு சிறு பங்கு கூட அர்ச்சகர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? கிடையாது. பலருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கூடக் கொடுப்பதில்லை. அதில் அவர்கள் கோவிலுக்கு விளக்கு ஏற்ற வேண்டும். மலர்கள் சமர்ப்பிக்க வேண்டும். தினமும் ஒரு பூஜையாவது செய்யவேண்டும். உண்டியல் பணத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அரசு அதிகம் எடுத்துக்கொள்வது ஏன்? வரவு செலவுகள் இன்றுவரை வெளியாரால் தணிக்கை செய்யப்படுவதில்லை. அரசு தணிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்வதில்லை.. ஆகவேதான் நிதி அமைச்சர் சொல்கிறார் உண்டியலில் போடாதீர்கள்.


ஆரூர் ரங்
ஜன 18, 2024 09:19

விவசாய மாநிலம் உ.பி கூட சர்ப்ளஸ் பட்ஜெட் போட்டுள்ளது. துறைமுகம் தொழில்கள் போன்ற ஏராள வசதிகளுடன் உள்ள தமிழகம் ஆண்டுக்காண்டு லட்சம் கோடி கடன் வாங்கி???? துண்டு விழும் பட்ஜெட். ஆக இங்கே நடப்பது ஆட்சியல்ல. குடும்பக் கொள்ளைதான்.


Velan Iyengaar
ஜன 18, 2024 11:31

ஒரு ரூபாய் வரி செலுத்தி 1.9 ரூபாயை ஒன்றியத்திடம் இருந்து திரும்பி தரச்சொல்லுங்க ... நாமளும் surplus பட்ஜெட் போடலாம்... இன்னும் நம்ம மாநிலத்த upயை விட ராக்கெட் வேகத்துல முன்னேற்றி காட்டலாம்


கனோஜ் ஆங்ரே
ஜன 18, 2024 16:24

தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் என்பதால்தானே இப்படி


vbs manian
ஜன 18, 2024 09:19

கோடானு கோடி மக்களின் கனவு நிறைவேறியிருக்கிறது. நன்கொடை மூலம் பெறப்பட்ட பணம் செலவு செய்திருக்கிறார்கள். அரசு பணம் அல்ல. கோவில் டிரஸ்ட் கட்டுமான பணிகளை மேற்கொண்டு நிறைவேற்றம். .நாத்திகம் கழகத்தின் கொள்கை. ஆதிக்கம் ப ஜெ க வின் கொள்கை. மக்களின் பிரதிநிதியாய் மோடி கலந்து கொள்கிறார். பெரும்பான்மையான மக்களின் இறை நம்பிக்கையோடு ப ஜெ க ஒத்துப்போகிறது.பெரும் காற்று வீசும் பொது மலர்களும் பழங்களும் கீழே விழுகின்றன. காற்றின் குற்றமா.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை