உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீலகிரி கலெக்டர் படத்தை பயன்படுத்தி வாட்ஸ் அப் வாயிலாக பணம் மோசடி

நீலகிரி கலெக்டர் படத்தை பயன்படுத்தி வாட்ஸ் அப் வாயிலாக பணம் மோசடி

ஊட்டி : நீலகிரி கலெக்டர் படத்தை பயன்படுத்தி வாட்ஸ்-அப் வாயிலாக பணம் மோசடி செய்ய நடைபெற்ற முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்ட கலெக்டராக லட்சுமி பவ்யா கடந்த ஓராண்டாக பணியாற்றி வருகிறார். அவரது புகைப்படத்தை பயன்படுத்தி சில மர்ம நபர்கள் போலி வாட்சப் கணக்கை உருவாக்கியுள்ளனர். அந்த எண்ணில் மாவட்ட கலெக்டரின் தொடர்பில் உள்ளவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் குறுஞ்செய்தியில் எனது வங்கிக் கணக்கில் பிரச்னை இருப்பதால் உடனடியாக பணம் அனுப்ப முடியவில்லை. நீங்கள் பணம் அனுப்பி உதவி செய்தால், என் வேலை முடிந்ததும் உங்களுக்கு மீண்டும் பணம் அனுப்புகிறேன் என்று கலெக்டர் கூறுவது போல் இருந்தது. சந்தேகம் அடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் சிலர் இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் லட்சுமி பவ்யா உடனடியாக மாவட்ட எஸ்.பி. நிஷாவை தொடர்பு கொண்டு போலி வாட்சப் கணக்கு குறித்து புகார் தெரிவித்துள்ளார். மாவட்ட போலீஸ் எஸ்.பி. உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக இந்தப் போலி வாட்ஸ் அப் கணக்கு வியட்நாமில் தொடங்கி இருப்பதாகவும் வெர்ச்சுவல் நம்பர் முறையில் தொடங்கியுள்ளது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பிரவீணா தேவி தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தனது பெயரில் பணம் கேட்டால் யாரும் அனுப்ப வேண்டாம். என, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூலை 02, 2025 21:25

எனக்கு இதேபோல் ஒரு அனுபவம் ஏற்பட்டது. என்னுடைய நண்பன் சவுதியில் பணியில் இருக்கிறார். அவருடைய வாட்சப்பை பயன்படுத்தி என்னிடம் அவர் பணம் கேட்பதுபோல கேட்டான் ஒரு களவாளி. அதுவும் இரவு பத்தரை மணிக்கு. நான் முதலில் நண்பன்தான் என்று நம்பி பணம் கொடுக்க எத்தனித்தேன். பிறகு என்ன தோன்றியதுதோ எனக்குள், எதற்கும் அவனிடம் போன் செய்திட்டு confirm ஆனபிறகு பணம் அனுப்பலாம் என்று வாட்சப் நம்பருக்கு போன் போட்டேன். பதிலே இல்லை. பிறகு உஷாராகி பணம் அனுப்பவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை