உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்திற்கு பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள்: எல்.முருகன்

தமிழகத்திற்கு பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள்: எல்.முருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போது பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கி வருகிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டினார்.தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் இன்று (பிப்.,28) நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி ரூ. 17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் எல்.முருகன் பேசியதாவது: பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போது பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கி வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n6v6bznj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தின் வளர்ச்சிக்கு, கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. 2047ல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கு பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் எல்.முருகன், கவர்னர் ஆர்.என்.ரவி, தி.மு.க.,எம்.பி கனிமொழி, அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து

நிகழ்ச்சியின் துவக்கத்தில் முதலில் தேசிய கீதமும், அதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டன. சமீபத்தில் சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் உரையின் துவக்கத்தில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என கவர்னர் கோரியதும், அதன்படி பாடப்படாததால், கவர்னர் ரவி உரையை வாசிக்காமல் புறக்கணித்தததும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி