உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நகராட்சி கமிஷனர் அறைக்குள் ரகசிய கேமரா வைத்த விவகாரம்: நகர தி.மு.க., செயலாளர் சஸ்பெண்ட்

நகராட்சி கமிஷனர் அறைக்குள் ரகசிய கேமரா வைத்த விவகாரம்: நகர தி.மு.க., செயலாளர் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் அறைக்குள் ரகசிய கேமரா வைத்து கண்காணித்த விவகாரத்தில், தி.மு.க., நகர செயலாளர் நவாப்பை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்.கிருஷ்ணகிரியில், தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கடந்த ஜன., 25ல் நடந்தது.இதில், அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை மட்டும் சுத்தம் செய்ததாகக் கூறி தி.மு.க.,வினர் புகார் எழுப்பினர். நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி அறையில், சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணனை, நகராட்சி தலைவர் பரிதா நவாப்பின் கணவரும், நகர தி.மு.க., செயலருமான நவாப் திட்டினார்.பதிலுக்கு ராமகிருஷ்ணனும் அவரை திட்டினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள், கடந்த 6ம் தேதி பரவியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1dqcz7my&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இச்சூழ்நிலையில், நகராட்சி ஊழியர்கள், கமிஷனர் அறைக்குள் கடந்த 29ல் நுழையும் போது, அங்கிருந்த டிஜிட்டல் கடிகாரத்தில், 'பீப்' சத்தம் கேட்டது.இதையடுத்து, ஊழியர்கள் கடிகாரத்தை கழற்றி பார்த்தபோது உள்ளே ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரிந்தது.நகராட்சி கமிஷனரின் செயல்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் இந்த கேமரா வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், தி.மு.க.,கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், நவாப்பை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக அக்கட்சி பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

N.Purushothaman
பிப் 09, 2025 19:04

அவனை தூக்கியது யாரு ....பொது செயலாளர் ....அவரு எப்பேற்பட்டவரு ? படிக்கிறப்போ சோத்துக்கே வழியில்லைன்னு சொன்னவனுக்கு இன்னிக்கு பத்தாயிரம் கோடிக்கும் மேல சொத்து ....


Karthik
பிப் 09, 2025 17:48

பொதுவெளியில் உண்மை கசக்கிறது, அதனால் தற்காலிக நீக்கம், இது தண்டணை அல்ல- கண்கட்டு வித்தை..


subramanian
பிப் 09, 2025 12:59

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள காங்கிரஸ் காரர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்தால் 50 வருஷம் ஆனாலும் அமெரிக்காவை விட இந்தியாதான் பொருளாதார வல்லரசு.


subramanian
பிப் 09, 2025 12:56

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து திமுக காரன் சொத்துக்களை பறிமுதல் செய்தால் 150 கோடி இந்தியர் ஒவ்வொருவருக்கும் 100 கோடிக்கும் மேல் கிடைக்கும்.


Balaa
பிப் 09, 2025 12:06

இந்த கமிஷனர் கூடிய விரைவில் நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்படுவார் .


Balaa
பிப் 09, 2025 12:00

நவாப் நாற்காலி வலுவானது. ஒன்றும் செய்ய முடியாது. கமுக்கமாக மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார். இல்லையென்றால் இன்னொரு நவாஸ் கனிகொடுத்து சரி செய்து விடுவார்.


Anantharaman Srinivasan
பிப் 09, 2025 11:08

ப்ளீஸ் நோட் .. செயலாளர் நாவப்பை கட்சியிலிருந்து தற்காலிகமாகத்தான் நீக்கியிருக்கிறார்கள்.


பெரிய ராசு
பிப் 09, 2025 19:13

மக்கள் மறந்தவுடன் அவனை சேர்த்துக்குவானுங்க திருட்டு திமுக ..ஏன்னா அவன் மூர்க்கன் அல்லவா


SIVA
பிப் 09, 2025 11:07

அட்ரா சக்கை அட்ரா சக்கை, நகராட்சி அலுவலகம் என்பது GOVERMENT ஆபீஸ் தானா இல்ல இவர்களின் கிளை அலுவலகமா இது தாண்டா தவிட்டு திராவிட மாடல் ....


நசி
பிப் 09, 2025 10:05

பாம்பின் கால் பாம்பு அறியும் திருடனுக்கு திருடனை கணிக்க தெரியும். இதெல்லாம் பழமொழிங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை