உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாதிரியார் இல்லத்தில் கொலை; ஜாமின் மனு ஒத்திவைப்பு

பாதிரியார் இல்லத்தில் கொலை; ஜாமின் மனு ஒத்திவைப்பு

மதுரை : கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு சர்ச் பாதிரியார் இல்லத்தில் ஜன., 20ல் பங்கு பேரவை தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சேவியர் குமார் அடித்து கொலை செய்யப்பட்டார். தி.மு.க., ஒன்றிய முன்னாள் செயலாளர் ரமேஷ் பாபு, பாதிரியார் ராபின்சன் உட்பட 15 பேர் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிந்தனர்.சிலர் கைது செய்யப்பட்டனர். ராபின்சன் திருச்செந்துார் நீதிமன்றம், ரமேஷ்பாபு நாகபட்டினம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ரமேஷ்பாபு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி எம்.தண்டபாணி விசாரணையை மார்ச் 15 க்கு ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்