கட்டட மேஸ்திரி படுகொலை
அணைக்கட்டு:வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த வெங்கடசாமி ரெட்டியூரை சேர்ந்தவர் தேவேந்திரன், 35; கட்டட மேஸ்திரி. நேற்று முன்தினம் இரவு, வெளியே சென்று வருவதாக குடும்பத்தாரிடம் தெரிவித்து, கந்தனேரி பகுதிக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே, நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் ரத்த காயங்களுடன் தேவேந்திரன் பிணமாக கிடப்பதை பார்த்து பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை மீட்டு, விசாரிக்கின்றனர்.