உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அனைத்து மொழிகளையும் இணைக்கும் பாலமாக இசை உள்ளது: கவர்னர் ரவி

 அனைத்து மொழிகளையும் இணைக்கும் பாலமாக இசை உள்ளது: கவர்னர் ரவி

சென்னை: ''அனைத்து மொழிகளையும் இணைக்க, இசை ஒரு பாலமாக உள்ளது,'' என, தமிழக கவர்னர் ரவி தெரிவித்தார். மார்கழி மாதத்தை ஒட்டி, பாரதீய வித்யா பவன் மற்றும் தென் மண்டல கலாசார மையம் இணைந்து நடத்தும், 'பவன்ஸ் மார்கழி உத்சவ் - 2025' துவக்க விழா, சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதீய வித்யா பவனில் நேற்று நடந்தது. விழாவை துவக்கி வைத்து, கவர்னர் ரவி பேசியதாவது: சுதந்திரத்திற்கு முன், பிரிட்டிஷாரின் தலையீட்டால், நம் நாட்டின் கலை மற்றும் கலாசாரம் சார்ந்த கூறுகள் மறைக்கப்பட்டன. அவற்றை நாம் மீட்டெடுத்து காக்க வேண்டும். அனைத்து மொழிகளுக்கும் இசை பொதுவானது. அவற்றை இணைக்க இசை ஒரு பாலமாக உள்ளது. மேற்கத்திய கலாசாரத்தை தவிர்த்து, நம் பாரம்பரிய கலாசாரத்தை பின்பற்ற வேண்டும். ஏனெனில், நம் கலாசாரம், பண்பாடு, 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது. ஐரோப்பியர்களை விட, இந்தியர்களின் சிந்தனை புனிதம் வாய்ந்தது. இசை மற்றும் கலாசாரம் சார்ந்த பல ஆய்வுகளை மேலும் நாம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். செ ன்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி பேசுகையில், ''வரும், 2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும். நாடு முன்னேற, தனிமனிதனின் வளர்ச்சி முக்கியம். அந்த வகையில், கணிதத்தையும், இசையையும் இணைத்து புதிய பாடத்திட்டத்தை, சென்னை ஐ.ஐ.டி.,யில் கொண்டு வர உள்ளோம்,'' என்றார். சென்னை பாரதீய வித்யா பவன் தலைவர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்