உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சின்னத்துரை மீதான தாக்குதல் சம்பவத்தில் மர்மம்!

சின்னத்துரை மீதான தாக்குதல் சம்பவத்தில் மர்மம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: நாங்குநேரியை சேர்ந்த மாணவன் சின்னத்துரை மீதான தாக்குதல் சம்பவத்தில் மர்மம் நீடிக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சேர்ந்த அம்பிகாவதி மகன் சின்னத்துரை 20. இவர் வள்ளியூர் பள்ளியில் பயின்றபோது 2023ம் ஆண்டு ஆகஸ்ட்டில் சக மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டினர். பலத்த காயமுற்ற சின்னத்துரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்தார். இந்த தாக்குதல் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு சார்பில் அவருக்கு தேவையான உதவிகள், சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தற்போது திருநெல்வேலி திருமால் நகர் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அரசு ஏற்பாட்டில் வசிக்கின்றனர். சின்னத்துரை கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். சின்னத்துரை அலைபேசி செயலி ஒன்றின் மூலம் சிலரிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதில் தொடர்பு கொண்ட சிலர் அவரை தனியாக அழைத்துள்ளனர். அங்கு சென்ற அவரை அந்த கும்பல் கடுமையாக தாக்கி அவரிடம் இருந்து அலைபேசி, மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றனர். ஏற்கனவே அரிவாள் வெட்டுப்பட்ட வலது கையிலேயே மீண்டும் காயம் ஏற்பட்டது நேற்று இரவு அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். சின்னத்துரையிடம் போலீசார் விசாரணைக்காக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயனர் பெயரையும், பாஸ்வேர்டையும் கேட்ட பொழுது தனக்கு மறந்து விட்டதாக கூறினார்.அவரது இன்ஸ்டாகிராம் கணக்கினை மீட்டெடுப்பதற்காக அவரது மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டை கேட்ட பொழுது அதுவும் தனக்கு மறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சின்னத்துரையின் கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 17, 2025 15:13

போலிஸ் சொல்வது உண்மை என்று எடுத்துக்கொண்டு கருத்து சொல்வது சரியாக படவில்லை.....ஒரு வழக்கை எப்படி வேண்டுமானாலும் திசைதிருப்ப போலிஸாரால் முடியும்.....2023 ல் நடந்த சம்பவத்திற்கு என்ன காரணம் இதுவரையில் போலிஸாரால் கூறமுடியவில்லை..... நேற்று நடந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டார்களாக்கும்....!!!


Venkatesan Ramasamay
ஏப் 17, 2025 13:33

சார், நல்ல தீர விசாரிங்க ...மீண்டும் இது ஒரு வேங்கை வயல் சம்பவம் கிளைமாக்ஸ் மாதிரி திருப்பம் ஏற்படலாம். எல்லாமே நாடகம்.. உண்மை நிரூபிக்கப்பட்டால் இதுமாதிரியான ஆட்களை சும்மா விடக்கூடாது... தமிழ்நாட்டில் கலகத்தை உண்டுபண்ண நாடகம் நடக்கலாம்..


Iniyan
ஏப் 17, 2025 13:18

போலீஸ் பாணியில் விசாரித்தால் பாஸ்வர்ட் என்ன பாஸ் சென்டென்ஸ் கூட சொல்லுவான்


Ramesh Sargam
ஏப் 17, 2025 13:00

Password எப்படி மறக்கமுடியும். சின்னத்துரை சாதாரணமானவன் அல்ல. எதையோ மறைக்கிறான்.


Apposthalan samlin
ஏப் 17, 2025 12:51

தேடி போகும் பொது இந்த சம்பவம்


மணி
ஏப் 17, 2025 11:46

அப்ப அவனிடம் திருட்டுதனம் உள்ளது நைய புடைத்தால் மறந்த பாஸ்வேர்டு ஞாபகம் வரும்


muralidaran ms
ஏப் 17, 2025 11:16

அடையாளங்கள் நான் அல்ல என்பதை உணர வேண்டும் அடையாளங்கள் இருக்கக்கூடாது என்று அர்த்தமல்ல எந்த அடையாளமும் நான் அல்ல என்பதை உணர வேண்டும்


muralidaran ms
ஏப் 17, 2025 11:05

நமது அடையாளங்கள் நம்மை பிரிக்கின்றன அடையாளம் நான் அல்ல என்பதை உணர வேண்டும்


yum
ஏப் 17, 2025 10:02

grinder?!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை