உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமராக நாகேந்திரன் சித்தரிப்பு; எதிர்ப்பால் வருத்தம் தெரிவிப்பு

ராமராக நாகேந்திரன் சித்தரிப்பு; எதிர்ப்பால் வருத்தம் தெரிவிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் நேற்று நடந்த தென் மண்டல பா.ஜ., பூத் கமிட்டி மாநாட்டையொட்டி நிர்வாகிகள் சார்பில், கட்சி அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப் பட்டிருந்தது. அந்த பேனர்களில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனை பகவான் ஸ்ரீ ராமர் போல சித்தரித்து படம் வெளியிட்டிருந்தனர். இது, ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. சமூக வலைதளங்களில், பா.ஜ.,வினரின் இச்செயலை கண்டித்து பதிவு வெளியிட்டிருந்தனர். இதையடுத்து, நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில், தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். அதில், ''இத்தகைய செயல், மிகுந்த வருத்தத்துக்குரியது. அச்செயலுக்காக என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல், இது போன்ற செயல்களில் கட்சியினர் யாரும் ஈடபடக்கூடாது,'' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
ஆக 24, 2025 22:55

இந்த அவமானம் உமக்கு தேவையா?


Sridhar
ஆக 24, 2025 09:28

ஸீலீப்பர் செல்களின் குசும்பு?


Mani . V
ஆக 24, 2025 04:40

நல்லவேளையாக சீதையாக கஸ்தூரி மேடத்தை சித்தரிக்கவில்லை. இது அத்தனையும் இவன்கள் திமுக விடம் இருந்து கற்றது.


சமீபத்திய செய்தி