| ADDED : பிப் 17, 2024 12:16 AM
கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு, ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள நவகிரக தலங்களுக்கு ஒரே பஸ்சில் பயணம் செய்து, எந்த ஒரு சிரமமும் இன்றி, மீண்டும் கும்பகோணம் பஸ் நிலையம் வந்தடையும் வகையில், வரும் 24ம் தேதி முதல், நவகிரக சிறப்பு பஸ்கள் சேவை துவங்கப்படும். வாரம்தோறும் சனி, ஞாயிறுகளில் இந்த பஸ்கள் இயக்கப்படும். இதற்கு பயண கட்டணம், ஒருவருக்கு 750 ரூபாய். மூன்று பேர், 2,250 ரூபாய் மட்டும் இருந்தாலே, நவகிரக கோவில்களுக்கு சென்று, சிறந்த முறையில் தரிசனம் செய்து விட்டு வரலாம். பொதுமக்கள், www.tnstc.in என்ற மொபைல் செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம்.- சிவசங்கர்போக்குவரத்து துறை அமைச்சர்.