உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு: உறுதி செய்ய தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு: உறுதி செய்ய தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

சென்னை: போராடி வரும் விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.அவரது அறிக்கை:கோவை மற்றும் திருப்பூர் பகுதியைச சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் லட்சக்கணக்கான விசைத்தறியாளர்கள், கூலி உயர்வு கேட்டு கடந்த 30 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.வழக்கமாக மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கலந்தாலோசித்து நெசவு கூலி இறுதி செய்யப்படும். ஆனால் 2022 ஒப்பந்தக் கூலியை முழுமையாக வழங்காமல் குறைத்து வழங்கப்படுவதால், விசைத்தறியாளர்கள் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.சட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்துடன், மின் கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நியாயமான புதிய கூலி உயர்வு கேட்டு தொடர்ந்து பல முறை முறையிட்டும் சரியான தீர்வு கிட்டாததால், உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர்.வேலை நிறுத்தம் காரணமாக இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்காமல் இருப்பதால் அப்பகுதியின் பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.எனவே, தி.மு.க அரசு இதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நியாயமான கூலி உயர்வை உறுதி செய்து விசைத்தறியாளர்களைக் காக்க வேண்டும் என பா.ஜ., சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

pmsamy
ஏப் 18, 2025 06:43

நாகேந்திரன் உண்மையான பாஜக தலைவன் என்றால் தன்னுடைய சொந்த பணத்தில் கூலி உயர்வு கொடுக்க வேண்டும்


pmsamy
ஏப் 18, 2025 05:54

ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதி பத்தி பேசு நாகேந்திரா


Thetamilan
ஏப் 17, 2025 23:47

வெற்றித்தெண்டங்கள் அரசியல் செயகிறது


அப்பாவி
ஏப் 17, 2025 23:08

பாஞ்சிலட்சம் போடச் சொல்லுங்க. ஜும்லா அமித்சா வரும்போது ஞாபகம் மூட்டுங்க.


Sivagiri
ஏப் 17, 2025 19:33

ஐயா உக்காந்திருக்கிற ஸ்டைலே , சொகுசு பண்ணையார் பேர்வழி போல தெரியுது ,காங்கிரசுக்குத்தான் இப்டி ஆட்கள் தேவை , . . என்னத்த சொல்ல ? .. .


அப்பாவி
ஏப் 17, 2025 19:02

ஆஹா... தலுவர் ஆன பொறவு எல்லா பொறுப்பும் வந்திருச்சு.


S.Martin Manoj
ஏப் 17, 2025 18:30

நயினார் போய் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க சொல்லுங்க மோடி ஆட்சிக்கு வந்து 11 வருடமாகிறது.


ஆரூர் ரங்
ஏப் 17, 2025 19:36

ஸ்டாலின் பெட்ரோல் டீசல் விலையில் 500 ரூபாய் குறைத்து எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 500 மானியம் என வாக்குறுதி அளித்தார். என்னாயிற்று? ஆனால் இடையில் மத்திய அரசு பெட்ரோல் விலையை 3 முறை குறைத்துள்ளது. கர்நாடகாவில் டீசல் விலையை காங்கிரஸ் அரசு கடுமையாக ஏற்றியதால் அங்கு லாரி ஸ்டிரைக் நடக்கிறது.


S.Martin Manoj
ஏப் 17, 2025 20:18

ஆரூர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து நான்குவருடமே ஆகிறது மோடி ஆட்சிக்கு வந்து 11 வருடங்கள் ஆகிறது வாக்குறுதி கொடுத்ததில் சீனியர் மோடிதான்.முதலில் அவரிடம் கேட்பதுதானே நியாயம்.


S.Martin Manoj
ஏப் 17, 2025 20:36

ஆரூர் 2014 மோடி அரசு பதவியேற்கும்பொழுது பெட்ரோல் மீதான மத்திய அரசின் கலால் வரி 9.20 2014 மே தற்பொழுது 2025 19.90 டீசல் 2014 இல் மத்திய அரசின் கலால் வரி 3.46 தற்பொழுது 15.80 இடையில் 2021 ஆம் ஆண்டு பெட்ரோல் மீதான கலால் வரி 32.90 வரை உயர்த்தி பின் இரண்டுமுறை மத்திய அரசு குறைத்தது .2014 இல் கச்சா எண்ணெய் விலை 108 டாலர்கள் ஆனால் தற்பொழுது 65.31 டாலர்கள் கச்சா எண்ணெய் விலை உயரும்போது பெட்ரோல் விலையை ஏற்றும் மத்திய அரசு கச்சா எண்ணெய் விலை குறையும்போது விலை குறைக்க வேண்டும்தானே,


Kumar Kumzi
ஏப் 17, 2025 22:18

சோத்துக்கு வக்கில்லாம மதம் மாறிய கொத்தடிமையே யாருக்கு ஓட்டு போட்டீங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை