கரூரில் இன்று ஆய்வை தொடங்கும் தேஜ கூட்டணி உண்மை கண்டறியும் குழு!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கரூர் சம்பவம் குறித்து பாஜ தலைமையிலான உண்மை கண்டறியும் குழு இன்று தமது ஆய்வை தொடங்குகிறது.கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான தேசிய ஜனநாயக கூட்டணி உண்மை கண்டறியும் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து அறிவிப்பும் வெளியிட்டுள்ளது. ஹேமமாலினி எம்பி தலைமையிலான இந்த குழுவில், பாஜ, தெலுங்கு தேசம், சிவசேனா கட்சிகளின் எம்பிக்கள் இடம்பெற்று உள்ளனர்.இந்த குழுவினர் இன்று(செப்.30) கரூர் சென்று தமது ஆய்வைத் தொடங்குகின்றனர் என்று அக்குழுவில் இடம்பெற்ற சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே கூறி உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது; கரூரில் நிகழ்ந்த சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் குழு செல்லும். இந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்பதை கண்டறிய அவர்கள் இன்று (செப்.30) ஒருநாள் முழுவதும் அங்கு இருப்பார்கள். அதன் பின்னர் அவர்கள் ஒரு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்பார்கள்.இவ்வாறு சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே கூறினார்.