மேலும் செய்திகள்
உதவி கமிஷனர்பொறுப்பேற்பு
28-Feb-2025
சென்னை:திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ., ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உதவி கமிஷனர் செந்தில்குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.திருநெல்வேலி டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன், 60. இவர், போலீஸ் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து, 2009ல், விருப்ப ஓய்வு பெற்றவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு பாதுகாவலர்களில் ஒருவராகவும் பணிபுரிந்து உள்ளார். இரு தினங்களுக்கு முன், திருநெல்வேலி டவுன் வழுக்கோடை அருகே, மசூதியில் தொழுகை முடித்து வீடு திரும்பினார். அப்போது, ஜாகிர் உசேனை, நான்கு பேர் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொன்றனர். இதற்கு முன், நில பிரச்னை தொடர்பாக பல முறை ஜாகிர் உசேன், திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்துள்ளார். போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு, 'வீடியோ' ஒன்றையும் ஜாகிர் உசேன் வெளியிட்டார். அதில், என்னை கொலை செய்ய ஒரு கும்பல் சுற்றுகிறது என்றும், அக்கும்பலில் உள்ள நபர்கள் குறித்தும் தெரிவித்து இருந்தார்.இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்த, திருநெல்வேலி டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இதையடுத்து, ஜாகிர் உசேன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிந்து இருந்தும், மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்து சிறையில் அடைக்க தவறிய, உதவி கமிஷனர் செந்தில்குமாரை, 'சஸ்பெண்ட்' செய்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
தற்போது, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள உதவி கமிஷனர் செந்தில்குமாருக்கு, கடந்தாண்டு டிசம்பரில் இரவுப்பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. அப்போது, கமிஷனர் மூர்த்தி ரோந்து சென்ற போது, இரவு பணியில் பெண் இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே இருந்தனர். உதவி கமிஷனரின் கார், உடையார்பட்டி பகுதியில், தியேட்டர் முன் நிறுத்தப்பட்டு இருந்தது. கார் ஓட்டுநரான போலீஸ்காரர் மட்டும் இருந்தார். செந்தில்குமார், புஷ்பா 2 படம் பார்த்து கொண்டிருந்தார். பணி நேரத்தில் படம் பார்த்த விவகாரத்தை, நெல்லை முழுதும் தெரியச்செய்த கமிஷனர், அவரை கடுமையாக கண்டித்தார்.
28-Feb-2025