UPDATED : ஜூலை 14, 2025 06:51 PM | ADDED : ஜூலை 14, 2025 06:47 PM
சென்னை: சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக, ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பவர் கே.ஆர்.ஸ்ரீராம். இவரை, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7bxzwyu0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங், தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர்கள் தவிர, ஐந்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ம.பி., உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விபு பக்ரூ, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அசுதேஷ் குமார், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விபுல் மனுபாய் பஞ்சோலி, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தர்லோக் சிங் சவுகான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராமச்சந்திர ராவ், திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.