உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருமான கணக்கு தாக்கலுக்கு புதிய எக்ஸெல் படிவம்

வருமான கணக்கு தாக்கலுக்கு புதிய எக்ஸெல் படிவம்

புதுடில்லி : இணையதள இணைப்பின் தேவையின்றி, வருமான வரிக் கணக்கு படிவத்தை நிரப்பும் வகையில், எக்ஸெல் வசதியை வருமான வரித் துறை அறிமுகம் செய்திருக்கிறது.கடந்த 2024-25 நிதியாண்டு மற்றும் 2025-26 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரித் தாக்கலுக்கு கடைசி தேதியை செப்டம்பர் மாதம் 15ம் தேதி வரை அரசு நீட்டித்துள்ளது. எனினும், முன்கூட்டியே எளிதாக கணக்கு தாக்கல் செய்ய வசதியாக, ஐ.டி.ஆர்., 1, ஐ.டி.ஆர்., 4 ஆகிய படிவங்களை எக்ஸெல் வடிவில் அது வெளியிட்டுள்ளது.இதனால், இணையதள இணைப்பு தேவையின்றி, இந்த எக்ஸெல் படிவத்தில் வருமான கணக்கு தாக்கலுக்கான விபரங்களை பதிந்து கொள்ளலாம். பிறகு, ஆன்லைனில் இதை தாக்கல் செய்யலாம்.வருமான கணக்கு விபரங்களை நிரப்பி, படிவத்தை தாக்கல் செய்வதற்கான ஆன்லைன் வசதியை, வருமான வரித் துறை இணையதளத்தில் விரைவில் துவக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ