உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  புத்தாண்டு கொண்டாட்டம் கட்டுப்பாடுகள் அவசியம்: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

 புத்தாண்டு கொண்டாட்டம் கட்டுப்பாடுகள் அவசியம்: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

திருப்பூர்: ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: கிறிஸ்துமஸ் தினத்தன்று சென்னை, காஞ்சி புரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் நள்ளிரவில் மக்களை அச்சுறுத்தும் வகையில், இரவு முழுதும் டூ - வீலரில் அதிவேகமாக சென்றனர். பட்டாசுகளை வெடித்தும் தொந்தரவு செய்தனர். அவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் கட்டுப்பாடு, கோவில் திருவிழாவில் நேர கட்டுப்பாடு என பல்வேறு கெடுபிடிகளை விதித்து, தி.மு.க., அரசு ஹிந்துக்களுக்கு விரோதமாக நடந்து கொள்கிறது. ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டும். இரவு முழுதும் டூ - வீலரில் ரேஸ் நடத்துவதை தடுக்க வேண்டும். இரவு நேர ஆபாச நடனங்களை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி