உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

சென்னை ஐ.ஐ.டி.,யின் நிர்வாகக் கல்வித் துறையின் இரண்டாண்டு நிர்வாகவியல் எம்.பி.ஏ., படிப்புக்கு, வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நிர்வாகவியல் சார்ந்த பணிபுரியும் வல்லுனர்கள், இந்த இ.எம்.பி.ஏ., படிப்பில் சேர்ந்து, வார இறுதி நாட்களில் நடக்கும் நேரடி வகுப்புகளின் வாயிலாக படிக்கலாம். விருப்பமுள்ளோர், https://doms.iitm.ac.in/admission/ என்ற இணையதள இணைப்பு வாயிலாக விண்ணப்பிக்கலாம். வடகிழக்கு பருவமழைக் காலங்களில், தென் மாநிலங்களுக்கு உதவ, இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்கு மண்டலம் சார்பில், 29 பேரிடர் மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன; 148 வீரர்கள் உள்ளனர். படகுகள், உயிர் காப்பு மற்றும் மீட்பு உபகரணங்கள், 'லைப் ஜாக்கெட்' போன்றவை தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றில் 10 குழுக்கள், சென்னைக்கென பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை