உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 15 இடங்களில் என்.ஐ.ஏ., சோதனை

தமிழகத்தில் 15 இடங்களில் என்.ஐ.ஏ., சோதனை

ஹிந்துக்கள் மதமாற்றம் செய்யப்படுவதை தடுத்ததால், பயங்கரவாதிகளால் பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொல்லப்பட்டது தொடர்பாக, தமிழகம், புதுச்சேரியில் நேற்று, 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடு, அலுவலகம் என, 16 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அருகே திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 45. இவர் அப்பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வந்தார். ஹிந்து மதத்தின் மீது பற்று கொண்டவர். பா.ம.க., நகரச் செயலராகவும் இருந்தார். திருவிடைமருதுார், திருபுவனம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில், ஹிந்துக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை தடுத்து வந்தார். மதமாற்றம் செய்வோரை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில், 'வீடியோ' எடுத்து, சமூக வலைதளத்திலும் வெளியிட்டார். இவரை மர்ம நபர்கள், 2019, பிப்., 5ல், கொடூரமாக வெட்டிக் கொன்றனர். இது தொடர்பாக, திருவிடைமருதுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். பின், இந்த வழக்கு, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.என்.ஐ.ஏ., நடத்திய விசாரணையில், ராமலிங்கம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதும், அவரை கொல்வதற்கு, தேனியில் அறிவகம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. கொலையாளிகளாக, 18 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில், 13 பேர் கைது செய்யப்பட்டனர்; ஐந்து பேர் தலைமறைவாகி விட்டனர்.இவர்களின் படங்களை வெளியிட்ட என்.ஐ.ஏ., அதிகாரிகள், இவர்கள் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, அறிவித்திருந்தனர். ஏற்கனவே, பலரின் வீடுகளை முன்பு சோதனை செய்தபோது சில ஆவணங்களைப் பறிமுதல் செய்திருந்த அதிகாரிகள், அதை ஆய்வு செய்தபோது, பல முக்கிய தகவல்கள் கிடைத்தன.அதன் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேலக்காவேரியை சேர்ந்த பி.எப்.ஐ., கிளை தலைவர் முகமது யூசுப், எஸ்.டி.பி.ஐ., கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் முகமது பைசல், திருபுவனத்தைச் சேர்ந்த, எஸ்.டி.பி.ஐ., கட்சி உறுப்பினர்கள் சகாபுதீன், இம்தியாஸ், பி.எப்.ஐ., மாவட்ட செயலர் முகமது ஹாலித், எஸ்.டி.பி.ஐ., கிளை தலைவர் முகமது ஹாலித் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வழக்கறிஞர் ராஜாமுகமது, திருச்சி காமராஜர் நகரில் வசிக்கும் பி.எப்.ஐ., மண்டல தலைவர் அமீர்பாஷா, முகமது சித்திக், மயிலாடுதுறை மாவட்டம், வடகரை பி.எப்.ஐ., முன்னாள் மாவட்ட செயலர் நவாஸ்கான், முன்னாள் தலைவர் முகமது பைசல் ஆகியோர் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர். குத்தாலம் அருகே கருப்பூர் கிராமத்தை சேர்ந்த நவாஸ்தீன், நாகப்பட்டினம் திட்டச்சேரி முகமது ரபீக் மற்றும் புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் உள்ள, பி.எப்.ஐ., முன்னாள் நிர்வாகி அஷ்ரப் அலி ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இப்படி, தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் காரைக்காலில், 16 இடங்களில் நேற்று காலை, 6:00 மணியில் இருந்து, மாலை 6:30 மணி வரை சோதனையில் ஈடுபட்டதில், மேலும் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். - நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Vijay D Ratnam
ஆக 02, 2024 22:40

டூ லேட், இருந்தாலும் தமிழ்நாட்டின் டெல்டா பகுதி என்.ஐ.ஏ அதிகாரிகளை அன்போடு வரவேற்கிறது. வேட்டையாடு விளையாடு. நகரம், கிராமம், குக்கிராமம், சந்து பொந்து, இண்டு இடுக்கு என்று புகுந்து விளையாடுங்கோ வேட்டையாடுங்கோ.


பேசும் தமிழன்
ஆக 02, 2024 19:04

இஸ்ரேல் நாட்டிடம் நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.... எங்கோ ஈரான் தலைநகர் மற்றும் ஏமன் நாட்டில் உள்ள ஒரு ஊரில் இருக்கும் தீவிரவாதியை துல்லியமாக காலி செய்து விடுகிறார்கள்.... ஆனால் இங்கே நாம் குண்டு வைத்த ஆட்களுக்கு... சிறையில் வைத்து பிரியாணி செலவு செய்து கொண்டு இருக்கிறோம் ???.... அவன் வெளியே வந்த பிறகு... மீண்டும் அதே தவறை தான் செய்ய போகிறான் !!!


RaajaRaja Cholan
ஆக 02, 2024 18:39

மத வெறி மிருகங்கள் , நாட்டை விட மனிதனை விட மதமே பெரியது என்று அலைந்து திரியும் மூடர் மத வெறியர்கள் , இதுல ivanunga சங்கிகளிடம் குறை கண்டுபிடிக்கும் மூடர் மத வெறி பைத்தியங்கள். முதலில் மனிதன் piragu தாண்ட இறைவனும் எவனும் , அடுத்தவன் உயிரை பறிக்கும் மத வெறி ஓநாய்கள், இது மாதிரி சில மத வெறி பிடித்த இவனுங்க இருக்கும் நாடு எதிலுமே நிம்மதி இருக்காது , எந்த மதத்தையும் குறிப்பிடவில்லை , அரிப்பெடுத்தவர்கள் சொரிந்து கொள்ளலாம்


J.V. Iyer
ஆக 02, 2024 17:16

பலமாதங்கள், வருடங்கள் கழித்து சோதனை செய்தால் என்ன துப்பு கிடைக்கும்? இதெல்லாம் வேலைக்கு ஆகுமா? நேரம், பணம் விரயம்.


என்றும் இந்தியன்
ஆக 02, 2024 17:11

இதனால் என்னாய்யா புண்ணியம் இந்த நாட்டுக்கு???சோதனைக்கு போனீங்களா கோல்மால் பார்த்தீர்களா ??தவறு கண்டேன் சுட்டேன் பணம் சொத்து அரசு அருவூலத்திற்கு ஆற்றப்பட்ட்து செய்யுங்கள் இவர்கள் எண்ணிக்கை உடனே குறைந்து விடும்


N.Purushothaman
ஆக 02, 2024 13:44

சமூக நீதிக்கு எதிரான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது ....தமிழகத்தில் மதம் சார்ந்த கொலைகளை செய்வதற்கு சிறுபான்மையினருக்கு உரிமை உள்ளது. அதை தற்போதைய தமிழக அரசு ஆட்சியாளர்களின் இன்னுயிரை நீத்தாவது காக்கும் என்பதை சிறுபான்மை குற்றவாளிகளுக்கு தெரிவித்து கொள்கிறோம் ...


என்றும் இந்தியன்
ஆக 02, 2024 17:02

ஆகவே சிறுபான்மை இன முஸ்லிம்களே கிறித்துவர்களே நீங்கள் எவ்வளவு இந்துக்களை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் உங்களுக்கு முழு உரிமை உள்ளது, உங்கள் குரான் காபிர் பைபிளில் Sinners கூட அப்படித்தான் கூறியுள்ளபடியால் நாங்கள் உங்களுக்கு முழு ஆதரவு தருகின்றஓம் - இப்படிக்கு -முஸ்லீம் நேரு காங்கிரஸ் திருட்டு திராவிடம் திருட்டு முஸ்லீம் திரிணாமுல் கட்சி


N.Purushothaman
ஆக 02, 2024 19:14

அற்புதம் ஜி ...


Sridhar
ஆக 02, 2024 12:59

சோதனை சோதனைனு எதர்கெடுத்தாலும் இதையே சொல்லிக்கிட்டுருக்கீங்க. இதுவர ஒரு ஆளும் தண்டிக்கப்பட்டதாக தெரியல்ல. கோயம்பத்தூர் பெங்களூர் ல எல்லாம் பாம் வச்ச மேட்டர்லயும் இதே சோதனைகள் தான் அதுனால இவனுக சோதனை னு கேட்டாலே ரோதனயா இருக்கு


ES
ஆக 02, 2024 12:45

what were state government doing all these time?


KRISHNA
ஆக 02, 2024 12:43

லஞ்சம் வாங்கிட்டு ஒட்டு போடறவங்களுக்கு மற்றும் ஒட்டு போட வாய்ப்பு இருந்தும் ஒட்டு போடாதவர்களுக்கு , நாம லஞ்சம் வாங்கிட்டு ஒட்டு போடறதால மற்றும் ஒட்டு போட வாய்ப்பு இருந்தும் ஒட்டு போடாததால தீவிரவாதம் அதிகமாகும், லஞ்சம் ஊழல் அதிகமாகும், ரௌடியிசம், கொலை அதிகமாகும், விலைவாசி அதிகமாகும், கஞ்சா, போதை பொருள் நடமாட்டம் அதிகமாகும், இந்து கலாச்சாரமே பாதிப்புக்கு உள்ளாகும் போன்ற உண்மைகள் தெரியுமா? தெரியாதா? அல்லது நம்ம நாட்டின் மீது அக்கறை இல்லையா?


Anand
ஆக 02, 2024 11:25

இவர்களில் ஒருவனைக்கூட என்கவுண்டர் செய்யவில்லையே ஏன்?


மேலும் செய்திகள்





புதிய வீடியோ