உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை

தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.திருவாரூரில் ஹிந்து முன்னணி தலைவர் ராமலிங்கம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த முகமது அலி ஜின்னா 2024ல் பூம்பாறையில் தேசிய புலனாய்வு முகமையினரால் கைது செய்யப்பட்டார். அவர் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4uhykm7q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் தொடர்ச்சியாக அவருடைய வங்கி பண பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 20) காலை 6:00 மணி முதல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியில் உள்ள முகமது யாசின் என்பவரின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வத்தலக்குண்டு காந்திநகர் விரிவாக்க பகுதியில் முகமது அலி ஜின்னாவின் மாமனார் உமர் கத்தாப் குடியிருக்கும் வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணை நடத்தினர். தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி., சம்சுதீன் தலைமையிலான அதிகாரிகளும் திண்டுக்கல் பேங்க் ஆப் இந்தியா வங்கி அதிகாரிகளும் உடன் இருந்தனர்.கொடைக்கானலில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல், வத்தலக்குண்டு, பேகம்பூர் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ManiMurugan Murugan
ஆக 20, 2025 20:36

திருப்பரங்குன்றம் மலை பிரச்சனையை முஸ்லிம் அமைப்புகள் சம்பந்தம் இல்லை என்ற பிறகும்,கிளறிக் கொண்டுள்ளக் கூட்டத்தையும் தடை செய்யப்பட்ட பாப்புலர் அமைப்பு விளம்பரத்தை உபயோகிக்கும் கூட்டத்தையும் பிடித்து விசாரிக்கவும்.


chandrasekaran p.m.
ஆக 20, 2025 15:37

இது இண்டி கூட்டணிக்கு எதிரான செயல்


Tamilan
ஆக 20, 2025 15:04

தமிழர்களுக்கு எதிரான மத்திய மதவாத கும்பல்


Modisha
ஆக 20, 2025 18:48

ஒருவகையில் சரி. உங்களைப்போன்ற விஷமி தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை தான் idhu.


Barakat Ali
ஆக 20, 2025 14:39

தமிழகம் மத அடிப்படைவாதத்தின் நிலைக்களனாக இருக்கும் வரை தமிழர்களுக்கே தலைகுனிவுதான் ......


Ramesh Sargam
ஆக 20, 2025 12:39

இதுவரை செய்யப்பட்ட சோதனைகளில் எவ்வளவு பேர் ஊழல் செய்திருக்கிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றார்கள், கூற முடியுமா?


M Ramachandran
ஆக 20, 2025 12:07

மக்கள் சும்மாயிருக்கும்போது நீங்க யேன் இந்த வேலை செய்கிறீர்கள்.


M Ramachandran
ஆக 20, 2025 12:00

விடியலின் ஒட்டு வங்கியில் கை வைய்யகிறீர்கள். கோபம் கொப்பளிக்கிறது.அதன் வெளி பாடு உடன் தெரியும்


Jack
ஆக 20, 2025 11:51

மினாரிட்டியா இருக்கும் இடங்களில் மத நல்லிணக்கம் பற்றி பேசுவார்கள் ..மெஜாரிட்டியா இருந்தா ஷரியா சட்டம் வேண்டுமென்பார்கள்


Mithun
ஆக 20, 2025 10:15

குற்றம் நிரூபிக்கப்பட்டால் புல்டோசர்கள் உத்திர பிரதேசத்தில் இருந்து வரவழைக்கபடவேண்டும்.


Ganesan
ஆக 20, 2025 13:52

எப்பொழுது?


பேசும் தமிழன்
ஆக 20, 2025 09:32

விடியாத ஆட்சியில் தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி விட்டது போல் தெரிகிறது. அத்தனை தேச விரோத கும்பலும்.... தாங்கள் பதுங்கி இருக்க இண்டி கூட்டணி ஆளும் மாநிலங்கள் தான் சரியாக இருக்கும் என்று நினைத்து விட்டார்கள் போல தெரிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை