உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ரொக்க பரிமாற்றம் கூடாது சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவு

ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ரொக்க பரிமாற்றம் கூடாது சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவு

சென்னை: 'சொத்து விற்பனை தொடர்பாக, பதிவுக்கு தாக்கலாகும் பத்திரங்களில், 20,000 ரூபாய்க்கு மேல், ரொக்க பரிமாற்றம் நடந்ததாக தெரிய வந்தால், அதை அனுமதிக்க கூடாது' என, சார் - பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. வீடு, மனை விற்பனை உள்ளிட்ட நிகழ்வுகளில் பணப் பரிமாற்றம் அதிகமாக உள்ளது. இதில் கருப்பு பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த, வருமான வரித்துறை பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, சொத்து பரிமாற்றத்தின் போது, அதற்கான விலையாக கொடுக்கப்படும் தொகையில், 20,000 ரூபாய்க்கு மேல், ரொக்கம் அனுமதிக்க கூடாது. ஏற்கனவே இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், பல்வேறு இடங்களில், பத்திரங்களில் அதிக தொகை ரொக்கமாக பெறப்பட்டதாக குறிப்பிடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்த உத்தரவு: சொத்து விற்பனை பத்திரங்களில், ரொக்க பரிமாற்றம் கூடாது. அவ்வாறு வந்தால், தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என, வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. இதை அமல்படுத்த பதிவுத் துறைக்கு, உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. எனவே, அனைத்து சார் - பதிவாளர்களும், இது விஷயத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும். பதிவுக்கு தாக்கலாகும் பத்திரத்தில், 20,000 ரூபாய்க்கு மேல், ரொக்க பரிமாற்றம் இல்லாததை, உறுதி செய்ய வேண்டும். இது விஷயத்தில் கவனக்குறைவாக செயல்படும், சார் - பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

V Venkatachalam
ஆக 05, 2025 15:44

இது வெளிப்படையான பரிவர்த்தனைக்கு மட்டுமே. டேபிளுக்கு அடியில் நடைபெறும் பரிவர்த்தனைக்கு இல்லை. அதற்கு எல்லை இருக்கா ங்கிற விஷயத்தை இதுவரை யாருமே கண்டுபிடிக்கலை..


Stephen Rajiah
ஆக 05, 2025 13:41

ரூபாய் 20ஆயிரத்துக்கு மேல் ரொக்க பரிமாற்றம் கூடாதா அல்லது ரூபாய் 20ஆயிரமும் அதற்கு மேலும் கூடாதா.


Stephen Rajiah
ஆக 05, 2025 13:29

Cash transaction limit in property registration.please clarify is it Rs20000/-and above or above Rs20000/-.


visu
ஆக 05, 2025 11:31

அவங்களே லஞ்சம் வாங்கிட்டு வேலை செய்யுறாங்க அவங்க கிட்ட இதை கண்டுபிடி என்றால் மேற்கொண்டு கொஞ்சம் அதிகமா லஞ்சம் வாங்கிட்டு அனுமதிப்பாங்க


GMM
ஆக 05, 2025 09:43

பத்திரத்தில், 20,000 ரூபாய்க்கு மேல், ரொக்க பரிமாற்றம் இருந்தால் மறு விற்பனையில் பதிவு எப்போதும் செல்லாது. அதன் அடிப்படையில் வங்கி கடன் கொடுக்க கூடாது. அல்லது வருமான வரி தடை இன்மை சான்று கட்டாயம் என்று பயனுள்ள தீர்வை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். மழுப்பலான தீர்வு காண இவ்வளவு அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு தேவையில்லை. ?


Sekar Times
ஆக 05, 2025 08:59

திருடராய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது?


Indhuindian
ஆக 05, 2025 08:00

இந்த உத்தரவு பத்திர பதிவு முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டனுங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த உத்திரவு இடைத்தரகர்கள் மூலம் நடக்கும் வியாபாரத்துக்கு பொருந்தாது அது அலுவலகத்துக்கு வெளியே அன்றாடம் கணக்கு முடிக்க வேண்டும்.


Thiagaraja boopathi.s
ஆக 05, 2025 05:18

லஞ்சம் ரொக்க மாகவே கொடுக்கப்பட வேண்டும். அப்போ தான் வேலை நடக்கும்


சமீபத்திய செய்தி