உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குறைந்த சம்பளம் கொடுத்ததால் தண்டவாளத்தில் கிளிப் அகற்றம்; வடமாநில வாலிபர்கள் கைது

குறைந்த சம்பளம் கொடுத்ததால் தண்டவாளத்தில் கிளிப் அகற்றம்; வடமாநில வாலிபர்கள் கைது

மானாமதுரை: ராமநாதபுரம் மாவட்டம், சூடியூர்--பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கிடையே செப்.16ல் ரயில்வே தண்டவாளத்தில் இருந்த 420க்கும் கிளிப்கள் அகற்றப்பட்டிருந்தன. உரிய நேரத்தில் கவனிக்கப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, மூன்று தனிப்படைகள் விஷமிகளை தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு, ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் மற்றும் மானாமதுரை பகுதிகளில் உள்ள ரயில்வே தண்டவாளங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் நான்கு பேரை விசாரித்தனர்.அதன்படி, தொடர்புடைய சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், 24, நித்தேஷ், 21, என இருவரை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறுகையில், 'இவர்களை வேலைக்கு அழைத்து வந்த ஏஜன்ட்கள், ரயில்வேயிடம் கூடுதல் சம்பளத்தை பெற்று, இவர்களுக்கு குறைந்த சம்பளத்தையே கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த இருவரும் தண்டவாள கிளிப்களை அகற்றியுள்ளனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
அக் 01, 2024 18:31

அவர்கள் தான் நாட்டுப்பற்று மிக்கவர்கள் என்று நமக்கு இங்கு வந்து பாடம் எடுப்பார்கள்!


Indian
அக் 01, 2024 13:38

வட மாநிலம் , வாயால் வடை சுடும் மாநிலம்


Rasheel
அக் 01, 2024 11:43

சரியாக லாடம் கட்ட வேண்டும்.


RAMAKRISHNAN NATESAN
அக் 01, 2024 10:42

ஏஜென்ட்டு அதிகமா சுருட்டிக்கிட்டு மிஞ்சுனதை உனக்கு கொடுத்தா நீயி அதுக்காக சனங்களை பழி வாங்குவியா ???? எங்க உ பி ஸ் திராவிட மாடலுக்கு காட்டுற விசுவாசத்துல ஒரு பர்சண்ட்டாவது நாட்டுக்கு காட்டுங்கப்பு .........


S.Martin Manoj
அக் 01, 2024 12:39

திராவிட மாடல் இருப்பதால் தான் வட இந்தியர்கள் மூன்று வேளையும் சாப்பிடுகிறார்கள் . அதிலும் உங்கள் மத தீவிரவாத உபி மாநில தொழிலாளர்கள் அதிகம்.


RAMAKRISHNAN NATESAN
அக் 01, 2024 14:18

திராவிட மாடல் இருப்பதால் தான் வட இந்தியர்கள் மூன்று வேளையும் சாப்பிடுகிறார்கள் ....... அடபொசகெட்ட அடிமையே ..... வேலைவாய்ப்பில்லை ன்னு சொல்ற உன்னைப்போன்ற திமுக அடிமைகள் வடக்கன்ஸ் ஐ உள்ளே விட்டு வேலை கொடுக்கவேண்டிய அவசியமென்ன ?? அதுவும் குறைந்த சம்பளத்துக்கும் அவன் வந்து வேலை செய்யறான் .... இதுல இன்னும் கேவலம் இதெல்லாம் ரெயில்வே காண்டிராக்ட் .........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை