உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக அரசுக்கான அபாயமணி: சொல்கிறார் நயினார்

திமுக அரசுக்கான அபாயமணி: சொல்கிறார் நயினார்

சென்னை: அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளது திமுக அரசுக்கான அபாயமணி என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் வரும் அக்டோபர் மூன்றாவது வாரத்தில் இருந்து துவங்கும் வடகிழக்குப் பருவமழையானது அதிகம் பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் திமுக அரசுக்கான அபாயமணி.மழைக்காலம் துவங்கும் வரை மெத்தனமாக இருந்துவிட்டு, வெள்ளத்தில் மூழ்கிய பிறகு ஆய்வு என்னும் போர்வையில் போட்டோ நடத்தும் திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தங்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் மீண்டும் இழக்கும் தெம்பும் திராணியும் மக்களுக்கு இல்லை.வெற்று விளம்பரங்களை விடுத்து, வரவிருக்கும் பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் திமுக அரசு உடனடியாகத் துரிதப்படுத்த வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைப்பது. தமிழகத்தின் நீர்நிலைகளைத் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்துவது. முறையான பராமரிப்பின்றி ஆங்காங்கே சிதைந்து கிடக்கும் மின்கம்பங்களை சரி செய்வது உள்ளிட்ட மழைநீர் வடிகால் பணிகளையும் பராமரிப்புப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடுவதன் மூலம், உயிர்ச்சேதங்களையும் பொருட்சேதங்களையும் தவிர்க்கலாம்.ஒரு கார் ரேஸ் நடத்துவதற்காக மொத்த நகரையும் ஒரு சில தினங்களில் புரட்டிப் போட்ட திமுக அரசால், அதே வேகத்தில் மழைநீர் வடிகால் பணிகளையும் மேற்கொள்ள முடியும் என நம்புகிறேன். எனவே. “வருமுன் காப்பது சிறந்தது' என்பதையுணர்ந்து முழு முன்னேற்பாடுகளுடன் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு தயாராக வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

pakalavan
செப் 16, 2025 05:44

நாயனாருக்கு பதவி போகப்போவது உறுதி, அன்னாமலைய சீன்டி சீன்டி, நிர்மலாவும் நாயனாரும் வன்னத்தி சீனிவாசனும் தான்


M Ramachandran
செப் 16, 2025 01:19

எவனையும் நம்ப முடிய வில்லை. எல்லாம் திருட்டு திராவிட கொள்கை பேசுறான். ஆளுக்கு ஒரு முடி பிடுஙக அடியேன் தலை மொட்டை கதை தான். எல்லாம் வேஷ தாரிகள்.


Tamilan
செப் 15, 2025 23:11

மோடியும் சாவும் எதிர்கட்சிகளை பார்த்து தினமும் அலறுவதைப்பார்த்தால் யார் அபாய கட்டத்தில் இருக்கிறார்கள் என்று தெரியும் .


Sundar R
செப் 15, 2025 22:26

HOW TO FIGHT AGAINST THE HEAVY MONSOON RAINS AND PROTECT THE PEOPLE FROM FLOODS BY TAKING UP PRECAUTIONARY MEASURES? 100 % De-silting should be done in all gutters particularly in all the residential areas and all the pathways where the water will be going. Water-logged gutters and drains should not be there. Garbage pile-up should not be there, particularly near the gutters or water-bodies. All the above risks should be monitored through radar, and the hazards should be eliminated by sending many workers to do the jobs where it is actually needed. Without monitoring through radar, if many workers are sent, they can only do 10% of the job and the purpose will be defeated and they may have to stand in neck-deep water or water-height may rise above the ground floor. In that type of perilous situation, people may have to retreat themselves to the top of the nearby hill near their residence. Last year, nothing was done and the people were suffering with a lot of difficulties. This year, the concerned authorities should therefore undertake precautionary measures several months prior to the commencement of the monsoon.


Tamilan
செப் 15, 2025 22:10

வெட்டிப்பேச்சு வீண் பேச்சு . பயத்தில் உளறுகிறார் . மோடியும் சாவும் பாஜவினரும தினமும் அலறுவதைப்பார்த்தால் யார் அபாயத்தில் இருக்கிறார்கள் என்று தெரியும். மீடியாக்களும் INDIA கூட்டணித்தலைவர்களைப்பார்த்து நாடே அலறுவதைப்போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன .


Mariadoss E
செப் 15, 2025 21:50

நீங்க கருத்து கந்தசாமி மாதிரி கருத்து சொல்றத விட்டுட்டு மத்திய அரசிடம் பேசி காங்கிரஸ் ஆட்சி போல் தமிழ்நாட்டுக்கு தாராளமா நிதி ஒதுக்க சொல்லுங்க...


ஆரூர் ரங்
செப் 15, 2025 22:07

நிதி எதுக்கு. நிதி குடும்பம் ஈர்க்கவா?


ஈசன்
செப் 15, 2025 21:49

ஆக உங்கள் தேர்தல் களப்பணிகளில் உங்களுக்கே நம்பிக்கை இல்லை. இயற்கை சீற்றத்தை நம்பி தேர்தலை சந்திக்க இருக்கிறீர்கள். சிங்கம் போன்று அனைவரையும் நடுங்க வைத்த அண்ணாமலை அவர்கள் எங்கே. நீங்கள் எங்கே. உங்களை சொல்லி ஒன்றும் இல்லை. கேட்பார் பேச்சை கேட்டு செயல் பட்ட பிஜேபி தலைமையை சொல்ல வேண்டும். 2026 இல் தணிந்து ஆட்சி அமைக்க வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், கணிசமான ஓட்டுக்கள் பிஜேபிக்கு கௌரவமாக வந்திருக்கும். இப்போதுள்ள பிஜேபி, கூட்டணி கட்சியின் காலையும் ஆளும் கட்சியின் வாலையும் பிடித்து கொண்டுள்ளது. ஒரு சந்தோஷமையா. நல்ல வேளை இந்த கண்டராவியை எல்லாம் தூக்கிப்பிடிக்காமல் அண்ணாமலை ஒதுங்கி விட்டார்


Naga Subramanian
செப் 15, 2025 21:47

தமிழகத்தில் பாஜகவை தூக்கி நிறுத்திய அண்ணாமலையாருக்கு தகுந்த இடம் கொடுக்காதவரை, பாஜக, 2026ல் மீண்டுமொருமுறை நோட்டாவை பெற்றுவிடும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை. தேவையில்லாமல் மற்ற காட்சிகளை பற்றி பேசுவதை விடுத்து, ஆக்க பூர்வமாக சிந்தித்து செயல்படவும். மொத்தத்தில், தமிழகத்தில், பாஜகவின் நிலைமையே தலைகீழாக மாறி விட்டது.


Mariadoss E
செப் 15, 2025 21:46

இது எவ்வளவு முட்டாள்தனமான கருத்து இது. இயற்கையை எந்த மனிதன் கட்டுபடுத்த முடியும்?


Modisha
செப் 15, 2025 22:30

அதிமுக ஆட்சியின் போது ஸ்டாலின் சொன்ன கருத்துகள் போல ..


Chandru
செப் 15, 2025 21:09

Total damage for sure this time. Dmk is gone


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை