உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை மறுநாள் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்; வானிலை மையம்

நாளை மறுநாள் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்; வானிலை மையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை மறுநாள் (நவ.,28) மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலேசியா மற்றும் அதனையொட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்யார் புயலாக உருவாகியுள்ளது. இந்தப் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாத சூழலில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 3 நாட்களுக்கான மழை எச்சரிக்கை குறித்த விபரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (நவ.,26) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (நவ.,27) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ.,28ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை கனமழை பெய்யும் என்றும், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி