உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி அசைன்மென்ட் பட்டாக்களில் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு

போலி அசைன்மென்ட் பட்டாக்களில் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளில் வழங்கப்பட்ட, 'அசைன்மென்ட்' பட்டாக்களை முழுமையாக ஆய்வு செய்து, போலிகளை கண்டுபிடிக்க வருவாய் துறை உத்தரவிட்டும், அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசுக்கு தேவைப்படாத புறம்போக்கு நிலங்களில், நீண்ட காலமாக குடியிருப்போருக்கு இலவச பட்டா வழங்கப்படும். 37 லட்சம் அதேபோல, சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில், குறிப்பிட்ட புறம் போக்கு நிலங்களை அரசு தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஒதுக்கி, 'அசைன்மென்ட்' என்ற பட்டாவை வழங்கும். கடந்த, 2011 - 2024 வரையிலான காலகட்டத்தில், 37 லட்சம் பட்டாக்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டன. அவற்றில், 14 லட்சம், 'அசைன்மென்ட்' பட்டாக்கள். அதேநேரத்தில், போலி, 'அசைன்மென்ட்' பட்டாக்கள் வாயிலாக, ஏராளமானோர் அரசு நிலங்களை ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், போலி, 'அசைன்மென்ட் பட்டா'க்களை கண்டுபிடித்து, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்கும்படி உத்தரவிட்டது.

துவக்கவில்லை

அதனடிப்படையில், அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்களை கண்டுபிடிக்க, வருவாய் துறை செயலர் அமுதா கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் உத்தரவு பிறப்பித்தார். ஆனாலும், போலி, 'அசைன்மென்ட்' பட்டாக்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை இன்னும் துவக்கப்படவில்லை. இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: போலி அசைன்மென்ட் பட்டாக்களை கண்டுபிடிக்க, பல மாவட்டங்களில், மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனாலும், பணியாளர் பற்றாக்குறை, சிறப்பு முகாம்கள் போன்ற கூடுதல் பணி காரணமாக, இப்பணிகள் முடங்கியுள்ளன. எனவே, கூடுதல் அவகாசம் கோரப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

K HARIHARAN
ஆக 30, 2025 23:24

மாவட்ட வாரியாக ரீ சர்வே எடுத்து சரியான முறையில் வீடு கட்டி உள்ள அனைவருக்கும் பட்டாவை கொடுத்துவிட்டு வீடு கட்டாத அனைத்து இடத்தையும் அளந்து சர்வே எடுத்து அதை அரசு இடமாக ஒதுக்க வேண்டும் மேலும் ஒரே நபர் அதிகமாக ஆக்கிரமிப்பு வைத்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும் இதை செய்யாமல் இவர்கள் அரசியல்வாதிகள் வேண்டுமென்றே ஆக்கிரமிப்பிற்கு துணை செல்கின்றார்கள் வைக்கிற ஆக்கிரமிப்பு செய்பவர்களே அவர்கள் தான் அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்து அதை பாவங்களிடம் விற்று விடுகிறார்கள் இவ்வாறு செய்யும் நபர்களை அரசு ஒன்றுமே செய்வதில்லை பிளாட்பார்மில் கடை நடத்துபவர்களை இவர்கள் வேலை செய்ய அனுமதிப்பதில்லை இரவு கடை நடத்துபவர்களை கடை நடத்த விடுவதில்லை ஆனால் பல கோடி சொத்துகளை அபகரித்து நம் நாட்டிற்கு துரோகம் விளைவிக்கும் துரோகிகளை இவர்கள் வாழ விடுகிறார்கள் இவர்களைப் பிடித்து வாழ்நாள் ஜெயில் கொடுக்க வேண்டும் இதை உடனடியாக அரசு செய்ய வேண்டும் அப்படி செய்ய ஒரு அரசியல்வாதியும் இல்லை ஆகையால் முடிந்த அளவு நாமும் இதை மாற்றுவது அவ்வளவு சுலபம் அல்ல


Yasar Arafat Yasar Arafat
ஆக 30, 2025 19:22

அரசு இடம் தானே ஒன்றும் பிரச்சனை இல்லை.


joe
ஆக 30, 2025 17:27

ஊழலின் ஆரம்பமே வருவாய் துறையினரின் தவறான போக்கே ஆகும் .இதற்கு முன் பத்திர பதிவு அலுவலகங்களில்தான் பதிவில் தவறான வாசகங்களை புகுத்தி ஊழல் செய்தார்கள் .இப்போது வருவாய்த்துறையினர் தங்கள் விருப்பப்படி தவறாக சர்வே எண்களை புகுத்தி பணக்காரர்களுக்கு சட்ட விரோதமாக உதவி செய்து ஊழல் செய்கிறார்கள்.இது ஒரு புதுவிதமான ஊழல் .இது ஒரு சட்ட விரோத ஊழல் .இது எப்போது ஒழியப்போகிறதோ


V RAMASWAMY
ஆக 30, 2025 07:51

எல்லாவற்றிலும் குழப்பம், குடைச்சல்கள், லஞ்சம், சட்ட விதி மீறல்கள், கொள்ளையோ கொள்ளை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை