உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு

ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் விழுந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் தொடங்கி தென்காசி - தூத்துக்குடி மாவட்டங்கள் வரை ஒரே நாளில் 8 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் பல கொலைகளுக்கு மது தான் காரணமாக இருந்திருக்கிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் தி.மு.க., அரசும், அதன் காவல்துறையும் படுதோல்வி அடைந்து விட்டன என்பதைத் தான் இந்த படுகொலைகள் காட்டுகின்றன.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மது குடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பிரகதீஸ்வரன் என்ற இளைஞரும், அவரது கொலைக்கு பழிவாங்க கஸ்தூரி என்ற பெண்ணும் கொல்லப்பட்டு உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவிரியில் மதுக்கடையில் மது வாங்குவதில் ஏற்பட்ட போட்டியில் விஜய் என்பவர் கொல்லப்பட்டார். அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் அம்பலச்சேரியில் சுயம்புகனி, தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் உமா, விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே ராஜசேகரன், கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையத்தில் அஸ்வினி, கடலூர் மாவட்டம் சின்ன கங்கணாங்குப்பத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் என மொத்தம் 8 பேர் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் படுகொலைகளில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் பலரும் கூட படுகொலை செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது. இதனால் மாநிலத்தின் எந்த பகுதியிலும் மக்கள் அச்சமின்றி நடமாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. படுகொலைகள் உள்ளிட்ட பெரும்பான்மையான குற்றங்களுக்கு மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தான் காரணமாக உள்ளன. ஆனால், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், போதைப்பொருள்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எந்த அக்கறையும் தி.மு.க., அரசுக்கு இல்லை.தமிழகத்தில் ஒரே நாளில் அதிக கொலைகள் நடைபெறுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் இதே போன்று படுகொலைகள் நடைபெற்ற போதெல்லாம் அதை பா.ம.க., சுட்டிக் காட்டி வந்திருக்கிறது. ஆனால், கொலைகளை கட்டுப்படுத்தி, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, குற்றங்களை மூடி ம்றைப்பதிலும், பிரச்னைகளை திசை திருப்புவதிலும் தான் ஆர்வம் காட்டுகிறது. மக்களைப் பாதுகாப்பதும், சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்துவதும் தான் ஆளும் அரசின் முதல் கடமை . ஆனால், அந்தக் கடமையை செய்யத் தவறிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெறுவதாகக் கூறிக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.முதல்வரும், அவர் கட்டுபாட்டில் இயங்கும் காவல்துறையும் இயல்பு நிலைக்கு திரும்பி சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

GMM
ஜூன் 03, 2025 20:12

கொலை அதிகம் நடக்கும் தாலுகா, மாவட்டங்களை அடுத்த தேர்தல் வரை ஜனாதிபதி, கவர்னர் நிர்வாகம் கீழ் மாவட்ட ஆட்சியர், போலீஸ் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் செயல் பட வேண்டும். தமிழகம் ஜனாதிபதி ஆட்சிக்கு திராவிடம் இருக்கும் வரை எப்போதும் தகுதி பெறும்.


Makkalal Khouri
ஜூன் 03, 2025 17:29

எப்படி உன்னை விட்டு வைத்தார்கள்


Kjp
ஜூன் 03, 2025 14:40

இப்படியே போனால் தமிழக ஆட்சியாளர்கள் மீது மக்கள் நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது.முதல்வர் மதுரையில் நடைபெற்றது பொது குழுவா இல்லை மாநாடா என்ற மயக்கத்தில் இருக்கிறார்..


P. SRINIVASAN
ஜூன் 03, 2025 13:28

இத நீ பேசறது தான் வேடிக்கையை இருக்கு..


Haja Kuthubdeen
ஜூன் 03, 2025 14:17

யாரு பேசுரார் என்பது முக்கியமில்லை...அதில் உண்மை இருக்கா என்பதே முக்கியம்.


vivek
ஜூன் 03, 2025 16:16

இப்படிக்கு சொம்பு சீனு


Jayaraman Duraisamy
ஜூன் 03, 2025 13:17

நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை அரசாங்கம் ஒவ்வொருவர் பின்னால் இருந்து பாதுகாப்பு குடுக்க முடியாது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனைகளை அரசாங்கம் தீர்த்து வைக்க முடியாது. சம்பவம் நடந்த பின் அதன் மேல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் கேள்வி கேட்கமுடியும். அதை விட்டு கெட்டவர்கள் யார் என்பதை அரசாங்கம் அடையாளம் கண்டு அவர்களின் பின்னால் இருந்து கண்காணிக்க முடியாது. இப்போ பாமகவில் நடக்கும் சொத்து தகராறில் அரசாங்கம் எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும். அது போலத்தான் அரசாங்கம் அசம்பாவிதம் நடந்த பின் நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்று தருவதன் மூலம் இது போல் நடந்தால் தண்டனை கிடைக்கும் என்பதை தான் செய்ய முடியுமே தவிர வேறுதுவும் செய்ய முடியாது.


Siva Balan
ஜூன் 03, 2025 12:47

தமிழகத்தில் எந்த குற்றமும் நடைபெறாமல் தடுக்க அனைத்து போதை பொருட்களும் அரசால் Door delivery செய்யப்பட வேண்டும். அது சரியாக சென்றடைகிறதா என்று போலிஸ் கண்கானித்து, அனைத்து மக்களும் வீட்டிலேயே மட்டையாகிறார்களா என்பதையும் கண்கானித்தாலே எந்த கொலையும் நடக்காது. சட்டும் ஒழுங்கும் சரியாக இருக்கும். திராவிட மாடல் ஆட்சின்னு மார் தட்டிக்கொள்ளலாம்.


Ramesh Sargam
ஜூன் 03, 2025 12:42

இந்தியாவிலேயே தமிழக காவல்துறைதான் மிக மிக மோசமான துறை. ஆட்சியில் உள்ளவர்களுக்கு சொம்பு தூக்குவதற்கே தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு நேரம் இல்லை. இதில் சட்டம், ஒழுங்கை எப்படி கவனிப்பார்கள்?


Barakat Ali
ஜூன் 03, 2025 12:39

பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டுப் போட்ட மக்களே கவலைப்படல ..... மீண்டும் பணம் கொடுத்தாலும் வாங்கிக்கிடுவாங்க ....


ஜூன் 03, 2025 12:36

2026 தமிழக மக்கள் ,,தங்களுக்காக உழைக்க கழகத்துக்கு மீண்டும் உத்தரவிட்டால் ..அமைப்புசாரா கொலைகாரர்களுக்கு தனி வாரியம் அமைக்கப்படும் .. அவர்களுக்கு இலவச பயிற்சி மையம் அமைக்கப்படும் ... தகுதி திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும் ...


சமீபத்திய செய்தி