உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலையோர கிணற்றில் கார் மூழ்கிய சம்பவம்; கோவையைச் சேர்ந்த 5 பேர் பரிதாப பலி

சாலையோர கிணற்றில் கார் மூழ்கிய சம்பவம்; கோவையைச் சேர்ந்த 5 பேர் பரிதாப பலி

சாத்தான்குளம்:தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றில் கார் மூழ்கிய சம்பவத்தில், கோவையைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தஞ்சாவூரைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குடும்பத்தினர், சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளை பகுதியில் நாளை நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிக்காக சொந்த ஆம்னி காரில் வந்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uk8fkcke&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக கார் விழுந்தது. இதில் காரில் இருந்த ஒரு குழந்தை உள்பட 7 பேரும் கிணற்றுக்குள் மூழ்கினர். இதற்கிடையில் காருக்குள் இருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டும் காரை திறந்து கிணற்றில் இருந்து தப்பி வெளியே வந்துள்ளனர்.தொடர்ந்து அந்த வழியாகச் சென்றவர்களிடம் நடந்த விபரத்தை கூறி அழுதுள்ளனர்.அவர்கள் அருகே உள்ள மீரான்குளம் கிராம மக்களிடம் கூறி கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். கிணறு சுமார் 50 அடி ஆழத்திற்கு இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் இறங்கி காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் அருகே உள்ள சாத்தான்குளம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றுக்குள் பொதுமக்கள் உதவியுடன் இறங்கி தேடினர். கிணற்றுக்குள் விழுந்த குழந்தை உள்பட 5 பேர் இறந்த நிலையில் மீீட்கப்பட்டனர். இது அப்பகுதி மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் கோவையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

எஸ் எஸ்
மே 18, 2025 08:35

இது போன்ற ஒரு பரிதாப Expertise முப்பது ஆண்டுகள் முன் கடலூர் மாவட்டத்தில் மோட்டார் வைத்த கூண்டு வண்டியில் சென்ற குழந்தைகள் பலி ஆகின. அப்போது தமிழ் நாடு முழுவதும் இது போல் சாலை ஓரம் சுற்று சுவர் இல்லாத கிணறுகளை மூட வேண்டும் அல்லது சுற்று சுவர் கட்ட வேண்டும் என்று உத்தரவு பறந்தது. பிறகு அவ்வளவுதான். கிடைப்பில் போடப்பட்டன


m.arunachalam
மே 17, 2025 21:13

வெளியூர் பயணத்தின் போது நிதானமாக பொறுமையாக சென்றால் என்ன? புதிய ஊர் , புதியபாதை எனில் நிதானம் தேவை . இது முழுவதும் கவனக்குறைவின் வெளிப்பாடுதான்.தெளிதல் நலம் .


Vel1954 Palani
மே 17, 2025 20:03

சாலை ஓரம் உள்ள எல்லா கிணறுகளுக்கும் 5 அடி சுற்று சுவர் கட்டவேண்டும்.


sundarsvpr
மே 17, 2025 19:43

பொதுவாக நீர் நிலை என்றால் கரை இருக்கும் வரப்பு இருக்கும். இதனை தாண்டி வண்டி மற்றும் பேருந்துக்குள் செல்ல இயலாது .வீடுகளில் கிணறுகளுக்கு மேல் தடுப்பு சுவர் உயரமாய் இருக்கும். ஆனால் வயல்களில் உள்ள கிணறுகளுக்கு மேல் சுவர் பொதுவாய் இருப்பதில்லை. எல்லா வயல் நிலங்களிலுள்ள கிணறுகளுக்கு மேல் சுவர் உள்ளதா என்று வட்டாட்சியர்கள் கவனிப்பது நல்லது.


மணி
மே 17, 2025 19:20

தமிழகம் முழுவதும் சாலையோர கிணறுகள் பாதுக்காப்ப ஏற்படுத்தனும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை