மேலும் செய்திகள்
'இசையால் வசமாகும் எதிர்காலம்!'
03-Nov-2024
நவம்பர் 13, 1935ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில், புலப்பாக்க முகுந்தராவ் - சரசம்மா தம்பதிக்கு மகளாக, 1935ல் இதே நாளில் பிறந்தவர் பி.சுசீலா.இசை மேதை துவாரம் வெங்கடசாமிநாயுடுவிடம் இசை கற்றார். சென்னை வானொலியில், 'பாப்பா மலர்' நிகழ்ச்சியில் பாட துவங்கினார். இயக்குனர்கே.எஸ்.பிரகாஷ் ராவின், பெற்ற தாய் படத்தில், 'எதற்கு அழைத்தாய்...' பாடலை பாடி, பின்னணிபாடகியானார். ஏ.வி.எம்., நிறுவனத்தில் தமிழ் கற்று, ஒப்பந்த பாடகியாக ஆயிரக்கணக்கான பாடல்களை பாடினார்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில், டி.எம்.எஸ்., - பி.பி.சீனிவாஸ் உள்ளிட்ட பாடகர்களுடன் இவர் பாடிய டூயட்களை ரசிகர்கள்கொண்டாடினர். அனைத்து இந்திய மொழிகளிலும்,அரை நுாற்றாண்டாக, 5,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய இவர், 'பத்ம பூஷன், கலைமாமணி' உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.தன் பெயரில் அறக்கட்டளை துவக்கி, இசை துறையினரை வளர்க்கிறார். 'ஆலய மணியின், முத்தான முத்தல்லவோ, மாலைப்பொழுதின், மறைந்திருந்து பார்க்கும்...' உள்ளிட்ட பாடல்களால்செவியில் தேனுாற்றும் இவருக்கு, இன்று 89வது பிறந்த தினம்!
03-Nov-2024